ஊழல் மலிந்த நாடுகளில் இந்தியாவுக்கு 74-வது இடம் மாலத்தீவு 90-வது இடத்தையும், இலங்கை 96-வது இடத்தையும் பிடித்துள்ளது

Read Time:1 Minute, 29 Second

உலகளவில் ஊழல் மலிந்த 180 நாடுகள் அடங்கிய பட்டியலில் இந்தியா 74-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 72-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு சற்று ஊழல் அதிகரித்துள்ளதால் இரண்டு இடம் இறங்கி 74-வது இடத்துக்கு வந்துள்ளதாக, சர்வதேச ஊழல் ஆய்வு ஏஜென்ஸி ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியா வகித்த 72-வது இடத்தை இந்த ஆண்டு சீனா எட்டிப் பிடித்துள்ளது. அதேபோல, மாலத்தீவு 90-வது இடத்தையும், இலங்கை 96-வது இடத்தையும் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஈரான் 133-வது இடத்தையும், லிபியா 134-வது இடத்தையும், நேபாளம் 135-வது இடத்தையும் பிடித்துள்ளது. பாகிஸ்தான் இந்த பட்டியலில் 140-வது இடத்தை பிடித்துள்ளது. உலகின் வல்லரசுகளான அமெரிக்கா 20-வது இடத்திலும், ரஷியா 145-இடத்திலும் ஊழல் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஊழல் குறைந்த நாடுகளில் முதல் 5 இடத்தை டென்மார்க், பின்லாந்து, நியூஸிலாந்து, சிங்கப்பூர், ஸ்வீடன் ஆகிய நாடுகள் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலஞ்சம் பெற்ற அம்பாந்தோட்டை பனை அபிவிருத்தி சபை ஒருங்கிணைப்பாளர் கைது
Next post களுபோவிலவில் அதிசக்தி வாய்ந்த போதை மருந்து விநியோகம் செய்தவர்கள் கைது