By 29 January 2018 0 Comments

ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்தில் டைட்டானிக் ரோஸ்!!

ஜேம்ஸ் கேமரூன் இயக்கி வரும் அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்களை டைட்டானிக் படத்தில் நடித்த கேட் வின்ஸ்லெட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 5 பாகங்களாக உருவாக உள்ள இந்த படத்தில் கேட் வின்ஸ்லெட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அண்மையில் இதன் படப்பிடிப்பு அமெரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டைட்டானிக் படத்திற்கு பின் 20 வருடங்கள் கழித்து மீண்டும் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கேட் வின்ஸ்லெட் நடிக்க உள்ளார்.

2009-ம் ஆண்டு வெளிவந்த அவதார் படம் உலகளவில் ரூ.18 ஆயிரம் கோடி வசூலை அள்ளி மிகப்பெரிய சாதனை படைத்தது. கேட் வின்ஸ்ட்லெட், சேம் வொர்திங்டன், ஸோ சல்டானா, வீவர் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர். ஜேம்ஸ் கேமரூனினி லைட்ஸ்டார்ம் எண்டர்டெயின்மெண்ட் இந்த படங்களை தயாரிக்க உள்ளது.



Post a Comment

Protected by WP Anti Spam