By 3 February 2018 0 Comments

‘அக்கா, ஐ லவ் யூ’ என அழைத்து காஜல் அகர்வாலை கலாய்த்த ரசிகர்!!

நடிகைகள் சமீபகாலமாக டுவிட்டர், ஃபேஸ்புக் மூலம் ரசிகர்களிடம் நேரடி தொடர்பில் இருக்கின்றனர். பல ரசிகர்கள் அவர்களிடம் அன்பு காட்டுவதும் சில சமயங்களில் வம்புக்கு இழுப்பதும் தொடர்கிறது. சமீபத்தில் மால் திறப்பு விழா ஒன்றுக்கு வந்த தமன்னா மீது அவரது ரசிகர் என்று கூறிக்கொண்ட நபர் ஒருவர் திடீரென்று தமன்னா மீது ஷூ வீசினார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தமன்னாவை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் நேற்று நடிகை காஜல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்தார். காஜல் வருகிறார் என்று அறிந்ததும் ரசிகர்கள் கூட்டம் கூடிவிட்டது, கூட்டத்திலிருந்த ரசிகர்களில் ஒருவர் காஜல் அகர்வாலை பார்த்து ‘அக்கா’ என்று சத்தமாக கூப்பிட்டார். குரல் வந்த திசையை நோக்கி காஜல் பார்த்தார். மீண்டும் அந்த ரசிகர் ‘அக்கா அக்கா, நான் தான் கூப்பிட்டேன்’ என்று கை அசைத்ததுடன் திடீரென்று ‘ஐ லவ் யூ’ என்றார்.

அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தார் காஜல். பிறகு அந்த ரசிகர் மீதிருந்து கவனத்தை வேறு திசையில் திருப்பினார். இதுகுறித்து காஜலிடம் கேட்டபோது,’கண்டிப்பாக அந்த ரசிகருக்கு இந்த முறை நான் ராக்கி கட்டிவிடுவேன்’ என்றார். ராக்கி என்பது சகோதரி சகோதரனுக்கு கட்டும் கயிறாகும். எனவே அந்த ரசிகரை காஜல் அகர்வால் சகோதரராகவே எண்ணுகிறார் என்று அங்கிருந்தவர்கள் முணுமுணுத்தனர்.



Post a Comment

Protected by WP Anti Spam