மனித உரிமையை பேணுவதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவாராம் புதிய பொலிஸ் மா அதிபர்

Read Time:1 Minute, 48 Second

பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டவும் மனித உரிமைகளை பாதுகாக்கவும் அர்ப்பணிப்புடன் செயற்பட போவதாக நேற்று பதவியேற்ற புதிய பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டிற்கான பாதுகாப்பை முழுஅளவில் உறுதிப்படுத்தவும் தாம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற பதவியேற்பு வைபவத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதற்காக பொலிஸார் மிகவும் தீவிரமாவும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வருகின்றனர் அவர்களின் தீவிர செயற்பாடுகள் காரணமாக பல பயங்கரவாத செயற்பாடுகள் தடுக்கப்பட்டுள்ளன இதன்மூலம் மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன எனது தலைமைத்துவத்தின் கீழ் பொலிஸாரின் மேற்படி செயற்பாடுகளுக்கு புத்தூக்கம் அளிக்கப்படும் பயங்கரவாத செயற்பாட்டை ஒழிப்பதற்கு மாத்திரமன்றி மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் ஊடகசுதந்திரத்தை பாதுகாப்பதற்கும் நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 8குண்டு வீச்சு விமானங்கள் அம்பலகாமம் மீது தாக்குதல்
Next post ஈரானில் சாலை விபத்து: 25 பேர் பலி