பிரிட்டிஷ் மகாராணியின் அழைப்பை வில்லியமின் காதலி நிராகரிப்பு
அரச குடும்பத்தினருடன் இணைந்து கிறிஸ்மஸ் கொண்டாட வரவேண்டும் என பிரிட்டிஷ் மகாராணி எலிசபத் விடுத்த அழைப்பை இளவரசர் வில்லியம்ஸின் காதலி கதே மிடில்டன் நிராகரித்துள்ளார். இளவரசர் சாள்ஸின் மகனான வில்லியம்ஸ் கதே மிடில்டன் என்னும் 26 வயது பெண்ணை காதலித்து வருகிறார். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் அடுத்த வருடம் ஏப்ரலில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இவ்வருட கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை அரச குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாட வரவேண்டுமென மகாராணி கதே மிடில்டனுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், இவ் அழைப்பை நிராகரித்துள்ள கதே மிடில்டன் திருமணம் நடந்துவிட்டால் அதன்பின்னர் அரச குடும்பத்துடன் தான் கிறிஸ்மஸ் கொண்டாட வேண்டும். இதனால் தனது பெற்றோருடன் கொண்டாடும் கடைசி கிறிஸ்மஸ் இதுவென்பதால் இவ்வருட கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு பெற்றோருடனேயே இருக்கப் போவதாக தெரிவித்துள்ளார். இதேவேளை, மகாராணியின் அழைப்பை நிராகரித்தது குறித்து அரச மாளிகை தகவல் தொடர்பாளர் எதனையும் தெரிவிக்க மறுத்துவிட்டார். இதற்கிடையில் அரச குடும்பத்தினருக்காக விமானமொன்றை வாங்க மகாராணி திட்டமிட்டுள்ளார். இவ்விமானம் சிற்?ண்டிச்சாலை, சமையலறை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் உட்பட பல வசதிகளையும் 12 பேர் அமர்ந்து பயணம் செய்யும் வகையில் இருக்கைகளையும் கொண்டிருக்குமென அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.