By 16 February 2018 0 Comments

பாலிவுட்டில் களமிறங்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் !!

லூசியா படம் இயக்கிய பவன் குமாரின், யூ-டர்ன் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். தமிழில் காற்று வெளியிடை, இவன் தந்திரன், விக்ரம் வேதா, ரிச்சி ஆகிய படங்களில் நடித்து வரவேற்பைப பெற்றார். தற்போது திக்மன்சு துலையா இயக்கும் மிலன் டாக்கீஸ் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.

இதில் 3 இடியட்ஸ், ஃபுக்ரே, பாபி ஜசூஸ் போன்ற படங்களில் நடித்த அலி ஃபைசலுக்கு ஜோடியாக நடிக்கிறாராம் ஷ்ரதா ஸ்ரீநாத். பாலிவுட்டில் இருந்து அழைப்பு வரும் என்பதை எதிர்பார்க்கவே இல்லை சிலிர்க்கும் ஷ்ரத்தா இப்படத்தின் படப்பிடிப்பில் மார்ச் மாதம் முதல் கலந்து கொள்ள இருக்கிறாராம்.



Post a Comment

Protected by WP Anti Spam