மரண படுக்கையில் உள்ள பின்லேடனை கொல்ல முஷரப்புடன் அமெரிக்கா ஒப்பந்தம்
பாகிஸ்தானில் மறைந்து வாழும் அல்-கொய்தா தலைவன் பின்லேடனை தாக்கி அழிப்பதற்கு அதிபர் முஷரப்புடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இதன்படி, பின்லேடன் இருப்பிடம் தெரிந்ததும், பாகிஸ்தான் அரசின் முன்அனுமதி இன்றி, ஆளில்லாத உளவு விமானங்களை அனுப்பி பின்லேடன் மீது குண்டு மழை பொழிய அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வுக்கு முஷரப் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கிடையே, பின்லேடன் சிறுநீரக கோளாறால் அவதிப்படுவதாகவும், அவன் இன்னும் 6 முதல் 18 மாதங்கள்வரை மட்டுமே உயிருடன் இருப்பான் என்றும் சி.ஐ.ஏ. உயர் அதிகாரிகள் இருவர் தெரிவித்துள்ளனர். பின்லேடன் சாப்பிடும் மருந்துகளின் பெயரையும் அவர்கள் வெளியிட்டனர்.
“காலைச்சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது” என்பார்கள். பாகிஸ்தானை (முஷரப்) சுற்றிக்கொண்டிருக்கும் (அமெரிக்க “புஷ்”) பாம்பு, பாகிஸ்தானை (ஆப்கான், ஈராக் போல்) ஒழிக்காமல் விடாது.