சவூதிக்கு சென்ற ஆறாவது நாளில் இலங்கைப்பெண் சவூதியில் தற்கொலை
சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாகச் சென்ற இலங்கை பெண்ணொருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இப்பெண் இலங்கையிலிருந்து சவூதிக்கு சென்ற ஆறாவது நாளில் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் எல்.கே ருஹ{னுகே ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்தார். பாத்திமா பஸ்மில்லா (வயது24) என்ற பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். இவர் கடந்த மாதம் 16ம் திகதி சவூதிக்கு பயணமாகியுள்ளார். அவர் தங்கியிருந்த வீட்டிலுள்ள மின்விசிறியில் சாரியைப் பயன்படுத்தி தற்கொலை செய்துள்ளதாக ருஹ_னுகே தெரிவித்துள்ளார். பணிப்பெண்ணாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் பெற்றுச் செல்வோர் உடல் ரீதியாக மாத்திரமன்றி உளரீதியாகவும் ஆரோக்கியமானவர்களாக இருக்க வேண்டும் அப்போது தான் புதிய சூழலுக்கு இவர்கள் தம்மை பழக்கப்படுத்திக் கொள்வார்கள் ஆகவே குடும்பத்தார் இதுதொடர்பில் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.