திருமணத்துக்கு எதிரானவரா லட்சுமி(சினிமா செய்தி)?
லட்சுமி மேனன் தற்போது பிரபுதேவாவுடன் எங் மங் சங், கவுதம் கார்த்திக்குடன் சிப்பாய் ஆகிய படங்களில் நடிக்கிறார். அவர் கூறுகையில், ‘திருமணத்துக்கு நான் எதிரானவள் கிடையாது. என்னைப் பொறுத்தவரை, திருமணம் என்பது அவசியம் என்று நினைக்கவில்லை. ஆனால், திருமணத்தின் மூலம் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே நல்ல நட்பு இருக்க வேண்டும். திருமணம் மூலமாக பெண்ணை ஆண் அடிமையாக்குவதற்கு நினைக்கக்கூடாது.
இப்படி நான் சொல்வதால், நானொரு பெண்ணியவாதி என்று நினைக்காதீர்கள்’ என்றார். அவரது திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம்? கேரளாவில் யாரையாவது அவர் லிவிங் டூ கெதர் பாணியில் காதலிக்கிறாரா என்று, தகவலுக்காக நெட்டிசன்கள் வலைவீசிக் காத்திருக்கின்றனர்.