மீண்டும் படப்பிடிப்பில் ஜான்வி(சினிமா செய்தி) !!
ஸ்ரீதேவியின் செல்ல மகளான ஜான்வி கபூர், இந்தியில், தடக் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் இருந்ததால், ஸ்ரீதேவியுடன் அவரால் துபாய் செல்ல முடியவில்லை. அம்மாவின் திடீர் மரணம் தாக்கிய அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் அவர், கடந்த 6ம் தேதி தனது பிறந்தநாளை, தன் சித்தப்பா அனில் கபூர் மகள் சோனம் கபூர் மற்றும் குடும்பத் தோழிகளுடன் எளிய முறையில் கொண்டாடினார். அப்போது அதிக சோகம் ததும்பிய மனநிலையுடன் காணப்பட்ட ஜான்வி, இனிமேலும் இப்படியே இருக்கக்கூடாது என்று தன் மனதைத் தேற்றிக்கொண்டார். இப்போது, மீண்டும் தடக் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று நடிக்கத் தொடங்கி இருக்கிறார்.