வடக்கு கிழக்கில் நடைமுறையில் உள்ள பாஸ்முறை கொழும்பிலும் அமுலாகிறது
எதிர்வரும் சார்க்மாநாட்டின் பாதுகாப்பை பருதி கொழும்பின் அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள் பிரவேசிக்கும் ஆட்கள் மற்றும் வாகனங்களுக்கு விஷேட பாஸ் அனுமதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இந்த பாஸ்முறை எதிர்வரும் ஜூலை 30ம் திகதி முதல் ஆகஸ்ட்3ம் திகதி வரையில் செல்லுபடியாகும் எனக்காவல்துறை அறிவித்துள்ளது இந்த பஸ்அனுமதி முறை இன்று முதல் கொள்ளுப்பிட்டி மற்றும் கோட்டை காவல்துறை நிலையங்கள் மூலம் விநியோகிக்கப்படவுள்ளது இதன்படி பாஸை வைத்திருப்பவர்கள் மாத்திரமே கொழும்பில் அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள் பிரவேசிக்கமுடியும் அத்துடன் வாகனங்களில் குறித்த பாஸைவைத்திருப்பவர்கள் மாத்திரமே பயணிக்கமுடியும் என்றும் காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.