நான் யாருக்கும் போட்டி இல்லை : சாய் பல்லவி(சினிமா செய்தி) !!
கரு படத்தில் நடித்துள்ள சாய் பல்லவி, மாரி 2வில் தனுஷுடன் நடித்து வருகிறார். அடுத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதையடுத்து மிஷ்கின் டைரக்ஷனிலும் நடிக்க உள்ளார். தெலுங்கிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் சில பட வாய்ப்புகளை அவர் நிராகரித்ததாக தகவல் வெளியானது. இது பற்றி அவர் கூறும்போது, ‘எல்லா கேரக்டர்களுக்கும் நான் பொருந்திவிடுவேன் என சொல்ல முடியாது. எனக்கான கேரக்டர்கள் எனக்கு வந்தே தீரும்.
அதில் மாற்றமில்லை. அதே சமயம், சில கதைகள் எனக்கு பிடிக்காமல் போகலாம். பணத்துக்காக நடிக்க நான் வரவில்லை. நல்ல படங்களில் நான் விரும்பும் படங்களில் நடிக்கவே ஆசை. என்னை யாருக்கும் போட்டியாக நான் நினைக்கவில்லை. அதனால் மனதுக்கு திருப்தி தரும் கதை, கேரக்டர்களையே தேர்வு செய்து நடிக்கிறேன்’ என்றார்.