சீனாவுக்கு ரகசியமாக புறப்பட்டு சென்ற வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்(உலக செய்தி)!!
Read Time:1 Minute, 23 Second
வடகொரியா அதிபரான கிம் ஜாங் உன் ரகசியமாக சீனாவுக்கு புறப்பட்டு சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடகொரியாவிலிருந்து ரயில் மூலம் சீனாவின் டேங்டாங் என்ற நகருக்கு புறப்பட்டு சென்ற கிம் ஜாங் உன். அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் காரில் பெய்ஜிங் நகருக்கு சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்புடன் நேரடி சந்திப்புக்கு வடகொரியா ஒப்புக்கொண்டுள்ள நிலையில் சீனாவுடன் ரகசிய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதனை உறுதி செய்யும் வகையில் பெய்ஜிங் நகரில் வடகொரியா அதிகாரிகள் வாகனங்களில் அணிவகுத்த காட்சிகள் வெளியாகியுள்ளன. வடகொரியா அதிபரான பிறகு கிம் ஜாங் உன் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும். சீன அதிபருடன் கிம் ஜாங் உன் ரகசியமாக ஆலோசனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Average Rating