அவன்கார்ட் சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ அதிகாரி கைது!!
அவன்கார்ட் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் நேற்று (28) மாலை சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஆயுத கிடங்கிற்கு பொறுப்பாக இருந்த முன்னாள் இராணுவ கேர்னல் அல்பிரட் விஜேதுங்க என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (28) காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.