ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம் தகர்ப்பு – 9 அமெரிக்க வீரர்கள் பலி

Read Time:1 Minute, 8 Second

ஆப்கானிஸ்தானில் குனார் மாநிலத்தில் வானாட் என்ற மலைக்கிராமத்தில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம் மீது 100-க்கும் மேற்பட்ட தலீபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். கையெறிகுண்டுகளும், மோட்டார் குண்டுகளும் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் முகாம் தகர்க்கப்பட்டது. 2001-ம் ஆண்டில் சண்டை தொடங்கியது முதல் இந்த அளவுக்கு மிகப்பெரிய இழப்பை அமெரிக்கா சந்தித்தது கிடையாது என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க ராணுவத்துக்கும் தலீபான்களுக்கும் இடையே கடுமையான யுத்தம் ஏற்பட்டது. அது பல மணிநேரம் நீடித்தது. இதில் 9 அமெரிக்க ராணுவ வீரர்கள் பலியானார்கள். 15 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தினந்தோறும் கிளாமர் படங்கள்..
Next post ராஜா இசையை வெளியிட்ட ரஹ்மான்! மீண்டும் தான் ஒரு ஜென்டில்மேன் என்பதை நிரூபித்துவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்