அமெரிக்க துணை ஜனாதிபதியாவதற்கான வாய்ப்புகள் ஹிலாரிக்கு குறைவு

Read Time:1 Minute, 40 Second

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாவதற்கான வாய்ப்புகள் ஹிலாரி கிளின்டனுக்கு குறைவடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராவதற்கு ஜனநாயகக் கட்சியில் நடந்த தேர்தலில் பராக் ஒபாமா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், ஜனநாயகக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றினால் துணை ஜனாதிபதி பதவி தனக்கே வழங்கப்படுமென ஹிலாரி வலியுறுத்தி வருகின்றார். ஆனால், ஹிலாரியின் கணவர் பில் கிளிண்டனின் காதல் விவகாரங்கள் அதற்குத் தடைக்கற்களாக உள்ளன. இதுகுறித்து ஒபாமாவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கையில்; பொதுவாழ்க்கையில் ஒழுக்கம், தூய்மை மிகவும் முக்கியம். ஆனால், ஹிலாரி குடும்பத்தின் மீது ஏராளமான அழுக்குகள் படிந்திருப்பதால் அவருக்கு துணை ஜனாதிபதி பதவி வழங்குவது கடினம் . முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் நிதி திரட்டிய விவகாரங்களும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதால் ஹிலாரியின் துணை அதிபர் கனவு கலைந்து வருவதாக லண்டனிலிருந்து வெளியாகும் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தினந்தோறும் கிளாமர் படங்கள்..
Next post மெக்சிகோ நாட்டில் தனது 4 மகள்களையும் கற்பழித்த தந்தைக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை