காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது கவலையளிக்கிறது : ஐ.நா. பொதுச்செயலாளர்!!

Read Time:1 Minute, 38 Second

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையேயான மோதலில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ கட்ரஸ் கவலை தெரிவித்துள்ளார். அண்மையில் அனந்த்நாக் மற்றும் சோபியான் மாவட்டங்களில் 3 இடங்களில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையேயான மோதல்களில் 13 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் 3 பேரும் பொதுமக்களில் 4 பேரும் உயிரிழந்தனர். சுமார் 50 பேர் காயம் அடைந்தனர்.

சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ், பொதுமக்களைப் பாதுகாப்பது உறுப்பினர் நாடுகளின் பொறுப்பு என்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் கூறினார். மேலும் பொதுமக்கள் எங்கு இருந்தாலும் அவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும் என்றும், பொதுமக்களின் பாதிப்புகள் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் என்றும் ஐ.நா.பொதுச்செயலாளர் தெரிவித்ததாகக் அவரது செய்தித் தொடர்பாளர் ஸ்டீஃபன் துஜாரிக் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நயன்தாராவின் அறம் படத்தின் 2-ம் பாகம் பணிகள் தீவிரம்!!
Next post டிப்ஸ்… டிப்ஸ்…!!(மகளிர் பக்கம்)