மிஸ் ஸ்மைலுக்கு வந்த சோதனை!(சினிமா செய்தி)

Read Time:4 Minute, 1 Second

மூடர்கூடம் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் நீயும் பொம்மை நானும் பொம்மை பாட்டு நினைவிருக்கிறதா? அந்தப் பாடல் காட்சியில் இடம்பெற்ற முகம் பளிச்சென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த முகத்துக்கு சொந்தக்காரர் சுமதி சுவாமிநாதன். சாஃப்ட்வேர் என்ஜினியரான இவர் அமெரிக்காவில் வசிக்கிறார். மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன், நண்பர் என்பதால் விடுமுறைக்கு வந்திருந்தபோது ஒரு காட்சியில் நடித்துக் கொடுத்தாராம்.

பட ரிலீஸின்போது தன்னுடைய முகத்தை பெரிய திரையில் பார்க்கவேண்டும் என்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து லீவு போட்டுவிட்டு சென்னைக்கு வந்தாராம். “நம்ம முகத்தை பெரிய ஸ்க்ரீன்லே பார்க்குற அந்த போதை இருக்கே! யப்பா…” என்று குதூகலிக்கிறார். மூடர் கூடம் படத்துக்குப் பிறகு நிறைய பேர் இவரை நடிக்க அழைத்திருக்கிறார்கள். நல்ல வேலை, பெரிய சம்பளம் என்பதால் அவற்றையெல்லாம் தவிர்த்திருக்கிறார். இப்போது அமெரிக்காவின் டல்லாஸ் நகரத்தில் வசிக்கிறார். ஓய்வு நேரத்தில் நடனம் கற்றுக் கொண்டாராம்.

நன்கு பாடுவார். அங்கே நடக்கும் உள்ளூர் இந்திய விழாக்களில் மேடையில் நடனம், பாட்டு என்று அசத்தியதன் மூலம் உள்ளூர் சேனல்களில் ஸ்டார் ஆகியிருக்கிறார். அமெரிக்காவில் நடந்த சிட்டி பியூட்டி அழகுப் போட்டியில் மிஸ் ஸ்மைல் ஆகவும் சுவாதியை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கோலிவுட்டில் திறமை காட்ட வந்திருக்கிறார்.

பீயர் படத்தில் அறம் சுனுலட்சுமியோடு இணைந்து நடித்திருக்கிறார். எப்போதும் பயத்தால் அழுது வடியும் வேடமாம். இப்படம் தவிர்த்து மூடர் கூடம் நவீன் இயக்கும் அடுத்த படத்திலும் நடிக்கிறார். இதிலும் சிரிக்கவே வாய்ப்பில்லாத முறைப்பான வேடமாம். “அமெரிக்காவிலே எனக்கு மிஸ் ஸ்மைல் பட்டம் கொடுத்திருக்காங்க. இங்கே பாருங்க எப்படிப்பட்ட கேரக்டர்களா கொடுத்து நடிக்கச் சொல்றாங்க….” என்று சிரிக்கிறார்.

எந்தத் துறையில் ஈடுபட்டாலும் முழு ஈடுபாடும் அர்ப்பணிப்பும் காட்டுபவள் நான். அதனால் என்னை நம்பி வாய்ப்புக் கொடுக்கலாம். நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கிறேன். தமிழ் பேசத் தெரியும். எனக்கு நானே டப்பிங் பேசமுடியும். அப்படி சில படங்களில் பேசியும் இருக்கிறேன். படம் முழுக்க வந்துவிட்டு பார்ப்பவர் மனதில் எவ்விதத் தாக்கமும் ஏற்படுத்தாத பாத்திரத்தைவிட, குறைந்த நேரமே வந்தாலும் மனதில் நிற்கிற மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கவே எனக்கு விருப்பம் என்கிறார் சுமதி சுவாமிநாதன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெயில் எனக்கு பிடிக்கும்!!(மகளிர் பக்கம்)
Next post நிலவேம்புவின் மகிமை !!(மருத்துவம்)