ஒலிம்பிக் தொடக்க விழா: மன்மோகனுக்கு அழைப்பில்லை?- சீனா விளக்கம்
வரும் ஆகஸ்ட்டில் சீனாவில் நடைபெறும் ஒலிம்பிக் தொடக்க விழாவில் பங்கேற்க இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அந்நாடு அழைப்பிதழ் அனுப்பவில்லை என வெளியான செய்தியை சீன வெளியுறவுத் துறை மறுத்துள்ளது. ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சீனா அழைப்பிதழ் அனுப்பியுள்ளதாகவும், பிரதமர் மன்மோகனுக்கு அழைப்பிதழ் அனுப்பவில்லை எனவும் இந்திய பத்திரிகைகள் சிலவற்றில் வெளியான செய்திகளை சீனா மறுத்துள்ளது.