By 16 April 2018 0 Comments

இளமையில் கூன் விழுதல(மருத்துவம்)

முதுகுவலியும், கழுத்து வலியும் வாகனம் ஓட்டுபவர்களுக்கும் வயதானவர்களுக்கும்தான் அதிகம் வரும் என நினைப்போம். ஆனால், பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளிடமும் இந்த வலிகள் அதிகரித்து வருகின்றன. காரணம் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு சரியான பாஸ்ச்சர் எது என்பதை யாரும் கற்றுத் தருவதில்லை.

குழந்தைகளின் முதுகெலும்பானது மிகவும் மென்மையானது. அது அந்த வயதில் முழுமையாக வளர்ச்சியடைந்திருப்பதில்லை. எனவே, அந்த வயதில் அவர்கள் சரியான பாஸ்ச்சரைப் பின்பற்றாவிட்டால் அந்த எலும்பானது சராசரி அளவைவிட நீண்டுபோகவோ, குறுகி போகவோ கூடும். 14 முதல் 16 சதவிகிதம் பள்ளிக் குழந்தைகளுக்கு முதுகு வலி இருப்பதாகச் சொல்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம்.

பள்ளிக்கூடத்தில் என்ன பிரச்னை?

*நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது.

*காலை வெயில் உடலில் படாத நிலை.

*தவறான முறையில் வடிவமைக்கப்பட்ட பெஞ்சுகள் மற்றும் இருக்கைகள். அவை பிள்ளைகளின் உயரத்துக்கேற்றபடி சரிசெய்துகொள்ள ஏதுவாக
இல்லாமலிருப்பது.

*பொதி சுமப்பது போன்ற அதிக கனமான புத்தகப் பைகள்.

இந்த எல்லாம் சேர்ந்து குழந்தைகளின் முதுகுப் பகுதிக்கு அதிக அழுத்தம் சேர்க்கின்றன. அதனால் வளர்ச்சி நிலையில் உள்ள முதுகெலும்பானது வளைகிறது.

உயரத்தைக் குறைத்து உருவத்தையே மாற்றுகிறது. முகுதுவலியை அதிகப்படுத்துகிறது.

தீர்வுகள் என்ன?

*குழந்தைகளின் பள்ளி டைம் டேபிளை மாற்றி அமைக்க வேண்டும். பாடங்களை குறைத்து, டைம் டேபிள் நேரத்தை அதற்கேற்ப குறைத்து
குழந்தைகளின் சுமை யை அகற்றலாம்.

*இன்டர்வெல் என்கிற பெயரில் 10 நிமிடங்களையும், மதிய உணவுக்கு அரை மணி நேரத்தையும் ஒதுக்குவது போக, அவற்றைத் தாண்டியும் நடுவில்
சின்னச் சின்ன பிரேக் கொடுத்து குழந்தைகளை எழுந்து நடமாட செய்யலாம்.

*இன்று பல பள்ளிக்கூடங்களிலும் பிளே கிரவுண்ட் கிடையாது. அப்படியே இருந்தாலும் விளையாட்டுக்கான பீரியடையும் பாட ஆசிரியர்கள் பறித்துக் கொள்கிறார்கள். இது முற்றிலும் தவறு. பள்ளிக்கூடங்களில் மைதானங்களில் வெயில் மேலே படும்படி பிள்ளைகளை விளையாட அனுமதிக்க வேண்டும்.

*குழந்தைகளின் தசை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவக்கூடிய ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற பயிற்சிகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும்.

*பெரும்பாலான பள்ளிகளிலும் குழந்தைகளுக்கான மேஜைகளும், நாற்காலிகளும் சரியாக வடிவமைக்கப் பட்டவையாக இருப்பதில்லை. குழந்தைகளின் உயரத்துக்கும், கைகளையும், கால்களையும் வைத்துக்கொள்ள ஏற்றபடியும், முதுகுப் பகுதி இருக்கையின் பின்னால் பதியும் படியும் இருக்கும்படியான மேஜைகளும், நாற்காலிகளும் அவசியம்.புத்தகப் பைகளை எடுத்துச் செல்லும்போது…

*பிள்ளைகள் தங்கள் உடல் எடையில் 60 சதவிகிதம் அளவுக்கு புத்தகப் பையை சுமந்து செல்கிறார்கள். அதனால் அவர்களுக்கு மிக இளவயதிலேயே முதுகுவலி வருகிறது.

*அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் பரிந்துரையின் படி குழந்தைகள் சுமந்துசெல்லும் புத்தகப்பையின் எடையானது அவர்களது உடல் எடையில் 15 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும் என்கிறது.

*புத்தகப் பைகளை சுமந்துசெல்லும் குழந்தைகள் அவற்றை முறையாக பயன்படுத்துகிறார்களா என்று கவனியுங்கள். அதாவது ஸ்டைலுக்காக ஒரே ஒரு பட்டையை மட்டும் மாட்டிக்கொண்டு செல்லாமல் இரண்டு பட்டைகளையும் மாட்டிக் கொண்டிருக்கிறார்களா என்று பாருங்கள்.

*புத்தகப் பையானது பேடுகள் வைத்த ஸ்ட்ராப்புகளுடன் இருக்குமாறு பார்த்து வாங்கிக் கொடுங்கள். அவைதான் அவர்களின் முதுகுப் பகுதியை அழுத்தாமல் இருக்கும்.

*பிள்ளைகளின் புத்தகப் பையானது தோள்பட்டைகளுக்கு கீழே தொங்க வேண்டும். இடுப்புக்குக் கீழே தொங்கவிட்ட படி செல்லக்கூடாது.

*புத்தகப் பையினுள் நிறைய பகுதிகள் இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும். அப்போதுதான் புத்தகங்களின் எடை, சரியான அளவில் விநியோகிக்கப் பட்டிருக்கும். சரியான பேலன்சும் கிடைக்கும்.

*பள்ளிக்கூடங்களில் அதிகப்படியான, அடிக்கடி தேவைப்படும் புத்தகங்களை வைக்க லாக்கர் வசதிகளை செய்துத்தர வேண்டும்.
வீட்டில் என்ன செய்யவேண்டும்?

* படிக்கிற குழந்தைகள் அடிக்கடி எழுந்து நடக்கவும், நிற்கவும் அறிவுறுத்துங்கள். ஒரே இடத்தில் பல மணி நேரம் உட்கார்ந்தபடி படிப்பதை
ஊக்குவிக்காதீர்கள்.

*அவர்களுக்கான ஸ்டடி டேபிள் மற்றும் கம்ப்யூட்டர் டேபிள்களை அவர்களது உயரத்துக்கேற்றபடி அமைத்துக்கொடுங்கள்.

*தினமும் ஒன்று முதல் 2 மணி நேரம் தொடர்ந்து டிவி பார்க்கும் குழந்தைகளில் 60 சதவீதம் பேருக்கு சீக்கிரமே முதுகு வலி வருவதாக சொல்கிறது ஒரு சமீபத்திய ஆய்வு. எனவே அந்த நேரத்தைக் குறைக்கப் பாருங்கள்.

* எப்போதும் செல்போனும், கையுமாக இருக்கும் குழந்தைகளை கவனியுங்கள். நீண்ட நேரம் செல்போனை கையாள்வது, மெசேஜ் அனுப்புவது போன்றவையும் பிஞ்சு குழந்தைகளின் முதுகைப் பதம் பார்த்து அதன் வடிவத்தை மாற்றக்கூடும்.

* கொழுகொழு குழந்தைதான் ஆரோக்கியமானது என நினைக்காதீர்கள். குழந்தைகளின் எடையில் எப்போதும் பெற்றோருக்கு ஒரு கண் இருக்க வேண்டும். சராசரியைவிட அதிக எடையுடன் காணப்படுகிற குழந்தைகளைக் கவனித்து எடை அதிகரிப்புக்கான காரணத்தைக் கண்டறியவும், அதைக் குறைக்கவும் முயற்சிகள் எடுக்க வேண்டும். அதிகப்படியான உடல் எடை என்பது முதுகின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.Post a Comment

Protected by WP Anti Spam