By 19 April 2018 0 Comments

அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ், நியூ யார்கர் ஊடகங்களுக்கு புலிட்சர் விருதுகள்!! (உலக செய்தி)

நியூயார்க் அமெரிக்க ஊடகங்களான நியூயார்க் டைம்ஸ், நியூ யார்கர் உள்ளிட்டவை பொது சேவைக்காக புலிட்சர் விருதுகளை பெற்றுள்ளன.
2018ம் ஆண்டுக்கான புலிட்சர் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் அமெரிக்காவின் நியூயார்க், நியூயார்கர் ஊடகங்களுக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வே வெய்ன்ஸ்டெய்ன் என்பவருக்கு எதிராக ஏராளமான பெண்கள் பாலியல் புகார்களை எழுப்பினார்கள். இதுகுறித்த செய்தியின் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக பொது சேவை பிரிவுக்கான புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது. புலனாய்வு பிரிவுக்கான விருதை தி வாஷிங்டன் போஸ்ட் வென்றுள்ளது. அலபாமாவில் குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க செனட் சபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட ராய் மூர் என்பவரின் பாலியல் முறைகேட்டை அம்பலப்படுத்தியதற்காக இந்த விருதை தி வாஷிங்டன் போஸ்ட் பெற்றுள்ளது.

தேசிய செய்திகள் பிரிவுக்கான விருதை நியூயார்க் டைம்ஸ், தி வாஷிங்டன் போஸ்ட் ஆகியவை பகிர்ந்துகொண்டுள்ளன. கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு, ரஷ்ய நடிகை மற்றும் டிரம்ப் பிரசாரத்திற்கான தொடர்பு குறித்த செய்தியை வெளியிட்டதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்காக போராடிய அதிபர் ரோட்ரிகோ டுடர்டே குறித்த செய்தியை வெளியிட்ட ராய்டர்ஸ் சர்வதேச செய்திகள் பிரிவில் புலிட்சர் விருதை பெற்றது. மேலும் ரோஹிங்கியா அகதிகள் குறித்த புகைப்படங்களை வெளியிட்டதற்காக சிறந்த புகைப்பட விருதையும் பெற்றுள்ளது.



Post a Comment

Protected by WP Anti Spam