பாடகியான நித்யா மேனன்!! (சினிமா செய்தி)
மாலினி 22 பாளையங்கோட்டை, ஜே எனும் நண்பன் வாழ்க்கை, காஞ்சனா 2. ஒ கே கண்மணி போன்ற படங் களில் நடித்த நித்யாமேனன் கடந்த ஆண்டு திரைக்கு வந்த மெர்சல் படத்தில் விஜய் ஜோடியாக நடித்திருந்தார். புதிய படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டிருக்கிறார் நித்யாமேனன். சமீபத்தில் திடீரென்று இவர் உடல் எடை கூடியதும் நடிப்பிலிருந்து ஒதுங்கியிருக்க காரணம் என்று கூறப்படுகிறது. அதுபற்றி கேட்டபோது உடல் எடை அதிகரிக்கிறது என்பதற்காக உணவு உண்ணாமல் இருக்க முடியுமா என்றார்.
நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தாலும் பாடல் பாடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார் நித்யா. நடிகைகள் ரம்யா நம்பீசன், லட்சுமி மேனன் ஆகிய நடிகைகள் ஏற்கனவே பாடகிகளாகவும் வலம் வருகின்றனர். அந்த வரிசையில் நித்யா மேனனும் இணைந்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது மலையாளத்தில் மோகன்லால் என்ற பெயரில் புதியபடம் உருவானது.
சாஜித் யாதியா இயக்கிய இப்படத்தில் இந்திரஜித், மஞ்சுவாரியர் நடித்திருக்கின்றனர். டோனி ஜோசப் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறேன். அதை சமீபத்தில்தான் நான் கேட்டேன் இனிமையாக இருந்தது. நான் நிறைய பாடல்கள் பாடியிருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தபாடலாக இது அமைந்திருக்கிறது. தொடர்ந்து பாடல்கள் பாடுவேன்’ என்றார்.
Average Rating