கலிபோர்னியாவில் காதல் ஜோடி !!(சினிமா செய்தி)
கலிபோர்னியாவில் இசை திருவிழா நடக்கிறது. புகழ்பெற்ற சர்வதேச இசைக் கலைஞர்கள் இதில் பங்கேற்று வருகிறார்கள். இதை காண நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடியாக கலிபோர்னியா பறந்துவிட்டார்கள். சமீபத்தில் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளுக்காக அவரை அமெரிக்கா அழைத்து சென்றிருந்தார் நயன்தாரா. இப்போது இருவரும் கலிபோர்னியாவில் விடுமுறை கொண்டாடி வருகிறார்கள். சென்னை திரும்பிய பிறகு அஜீத்தின் விஸ்வாசம் பட ஷூட்டிங்கில் நயன்தாரா பங்கேற்கிறார்.