ரஷ்ய அதிபராக 4வது முறையாக புடின் பதவியேற்பு!!(உலக செய்தி )

Read Time:3 Minute, 58 Second

ரஷ்யாவின் அதிபராக 4வது முறையாக விளாடிமிர் புடின் நேற்று பதவியேற்றார். ரஷ்யாவில் அதிபர் தேர்தல் கடந்த மார்ச் மாதம் நடந்தது. இதில், அதிபர் விளாடிமிர் புடினை எதிர்த்து, கம்யூனிஸ்ட் கட்சியின் பாவெல் குருடினின், தேசியவாத கட்சியின் விளாடிமிர் ஜிரினோவ்ஸ்கை போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையில், புடின் 76 சதவீத வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாவெல் 11.8 சதவீதம், ஜிரினோவ்ஸ்கை 5.6 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தனர். இதைத்தொடர்ந்து, 4வது முறையாக விளாடிமிர் புடின் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

கிரெம்ளின் மாளிகையில் பதவியேற்பு விழா கோலாகலமாக நடந்தது. விழாவுக்கு வந்த புடின், பீரங்கி குண்டுகள் முழங்க வரவேற்கப்பட்டார். மொத்தம் 5,000 விருந்தினர்கள் விழாவில் பங்கேற்றனர். இதில், அரசியலமைப்பு சாசனத்தின் மீது உறுதிமொழி ஏற்று அதிபர் பதவியை ஏற்றுக் கொண்டார் புடின். அப்போது அவர் பேசுகையில், ‘‘ரஷ்யாவின் நிகழ்காலம், எதிர்காலத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவதே என் வாழ்நாள் பணியாகும். அமைதியான வளமையான எதிர்காலத்திற்காகவும், ஒவ்வொரு ரஷ்ய குடும்பத்திற்காகவும் பாடுபடுவேன். என் தாய்நாட்டின் நலனுக்காக உழைப்பது மட்டுமே என் லட்சியம்’’ என்றார்.

ரஷ்ய உளவாளியாக 16 ஆண்டுகள் பணியாற்றிய புடின், கடந்த 1999ம் ஆண்டு தனது 47வது வயதில் ரஷ்யாவின் அதிபராக பதவியேற்றார். அதைத்தொடர்ந்து 2008ம் ஆண்டு வரை தொடர்ந்து 2 முறை அதிபராக நீடித்தார். ரஷ்ய அரசியல்சாசனப்படி அதிபர் பதவியை தொடர்ச்சியாக 2 முறைக்கு மேல் வகிக்கக் கூடாது என்பதால், 2008 முதல் 2012 வரை பிரதமராக பதவி வகித்தார். பின்னர் மீண்டும் 2012ம் ஆண்டு அதிபரான அவர் தற்போது 4வது முறையாக பொறுப்பேற்றுள்ளார். இவரது பதவிக்காலம் 6 ஆண்டுகள். தற்போது 65 வயதாகும் புடின் வரும் 2024ம் ஆண்டு வரை அதிபராக நீடிப்பார்.

நாடு முழுவதும் எதிர்ப்பு பேரணி
புடின் அதிபராக பதவியேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நடந்த பேரணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புடினின் ஆட்சியில் ஊழல் மலிந்து கிடப்பதாகவும், வெளி உலகிலிருந்து ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தொடர்ச்சியாக எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நாவல்னி விமர்சனம் செய்து வந்தார். அவரது தலைமையில் கடந்த சனிக்கிழமை, தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் எதிர்ப்பு பேரணிகள் நடத்தப்பட்டன. நாவல்னி உட்பட 1,500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2012ல் புடின் பதவியேற்பின் போது இதேபோல் கடும் எதிர்ப்புகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு கிலோ தங்கத்துடன் இரு பெண்கள் விமான நிலையத்தில் கைது!!
Next post 8 பேர் கொண்ட ஆவாக்குழு மீண்டும் இருவர் மீது வாள் வெட்டு!!