By 24 May 2018 0 Comments

எப்படியெல்லாம் நடக்குது கல்யாணம் ?(மகளிர் பக்கம்)

கச்சேரி… கொண்டாட்டம் என எல்லாமே ஊருக்கு ஊர் வித்தியாசப்படும். நிச்சயமா கல்யாணத்தன்னிக்கு மணமகனும்-மணமகளும் அடிக்கிற கூத்து எல்லாமே ரசிக்கக்கூடும். இந்த கூத்துக்கள் சில இடங்களில் எப்படியெல்லாம் நடக்குது… படியுங்களேன்!

*வேல்ஸ் பகுதியில், திருமணம் செய்து கொள்ளும் ஜோடியில் மணமகளுக்கு, மணமகன் நிச்சயம் ஒரு மர ஸ்பூனை அன்பளிப்பாகத் தருவான். எதற்கு? வாழ்நாள் முழுவதும் அவளுக்கு உணவளித்து காப்பான் என மணமகன் உணர்த்தவாம்

*ரஷ்யாவின், மாஸ்கோவில் இரண்டாம் உலகப்போரின் ேபாது, பெயர் தெரியாமல் இறந்தவர்களின் நினைவாக, ஒரு பெரிய நினைவுச் சின்னம் எழுப்பியுள்ளனர். இங்கு புது மணமகன்-மணமகள் சென்று அங்குள்ள கல்லறைக்கு பூ வைப்பர். அதே சமயம் உறவினர்கள், நண்பர்கள் சுற்றி வந்து சாப்பிடுவர். பெரும்பாலான மாஸ்கோ திருமண பார்ட்டிகள் இந்த நினைவுச் சின்னத்தில்தான் நடக்கும்!

*கல்யாண டிரஸ்களை, குறிப்பாக பெண்கள் காலம் பூராவும் வைத்து காப்பது நமக்குத் தெரிந்த விஷயம். ஆனால் அதில் லேட்டஸ்ட் டிரண்ட் என்ன தெரியுமா? புது டிரஸ்ஸை போட்டுக் கொண்டு, மண்ணில் உருளுவது, சேற்றில் முன்னேறி கூத்தடிப்பது, ஒருவருக்கொருவர் பெயின்டை அடித்துக் கொள்வது என புதுப்புது விளையாட்டுகளில் ஈடுபடுவதும், அதனை புகைப்படங்களாக எடுத்து, ஆல்பத்தில் போட்டு ஆற அமர அமர்ந்து ரசிப்பதுதான்…! இதனை புகைப்படக்காரர் ஜான் மிச்சல் கூப்பர் என்ற லாஸ் வேகாஸ் நிபுணர்தான் அறிமுகப்படுத்தினார். இன்று அது பொது டிரண்டாக மேலை நாடுகளில் பவனி வருகிறது.

*கல்யாணத்துக்குப் பின் கணவன்-மனைவி இணைந்து நடனம் ஆடுவர். அப்போது உறவினர்களும், நண்பர்களும், அக்கம்பக்கத்தினரும் அவர்களுடைய கோட்டில், தங்கள் மொய் பணத்தை குத்துவர். சிலர் பண ேநாட்டு மாலைகளையும் போடுவது உண்டு. அத்துடனே நடனத்தை தொடர்ந்து பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்துவர் மணமக்கள்!

*தென் அமெரிக்காவில் மாப்பிள்ளையை வரவேற்க பெண் வீட்டார் வெள்ளை கேக் செய்து வைத்திருப்பர். ஆனால் பதிலுக்கு மாப்பிள்ளை பெண்ணுக்கு ஒரு கேக் செய்து வைக்க வேண்டும். அது கருப்பு வண்ணத்தில் மது ஊற்றிக் கலக்கிய கலவையின் சூப்பர் டேஸ்ட்டாக அமைதல் வேண்டும். கேக்கின் சுவை, மணமகனுக்கு மணமகள் மேல் உள்ள ஆசையைக் காட்டுகிறதாம்.

*பிஜியில் கல்யாணத்தன்று, மணமகளின் கையை பிடிக்கும் முன் மணமகன், மணமகளின் தந்தைக்கு, சுறாவின் பல் ஒன்றை அன்பளிப்பாய் தருவானாம். எதற்கு? மணக்கப் போகும் பெண்ணுக்காக கடலுக்குள், பல நூறு அடிகள்கூட குதித்து அவளுக்குத் தேவையானதைக் கொண்டு வந்து சேர்ப்பேன் என்பது பொருளாம்.

*1754-ம் ஆண்டு பிரிட்டிஷ் திருமணச் சட்டப்படி, பிரிட்டனில் 21 வயதுக்கு உட்பட்டோர் திருமணம் செய்து கொள்ள இயலாது. இதனால் பிரிட்டனின் எல்லையில் உள்ள ஸ்காட்லாந்து நாட்டின் முதல் கிராமத்திற்குச் சென்று, அங்குள்ள சர்ச்சில், பல இளம்ஜோடிகள் திருமணம் செய்துகொள்வர். ஏன்? அங்கு 21 வயது சட்டம் அமலில் இல்லை. வருடா வருடம் இப்படி பல பேர் திருமணம் செய்து கொள்கிறார்களாம்.

*சீனாவில், கல்யாணத்துக்கு முன் மணமகளை, மணமகன் காண வந்தால், மணமகளின் வேலைக்கார பெண்கள் லேசில் பார்க்கவிட மாட்டார்கள். தடுத்து, பணம் கேட்பர். மணப்பெண்ணின் டிரஸ்ஸை கொடுத்து அணிந்து கொள்ளச் சொல்லி பாட்டுப் பாடியபடி டான்ஸ் ஆடச் சொல்லுவர். எதற்கு இதெல்லாம்? மனைவியை கணவன் பொறுமை காத்து திருப்திப்படுத்துவானா என தெரிந்து கொள்ளத்தான்.

*நிகார், உடபி பகுதியில் பெண்களை ‘திருமணம்’ செய்து கொள்ள ஆண்கள் சுயம்வரத்தில் கலந்து கொள்ள வேண்டும். சுயம்வரத்துக்கு வரும் ஆண்கள், கண்ணைக் கவரும் வண்ணங்களில் ஆடை அணிந்து முக அலங்காரங்கள் செய்துகொண்டு பாட்டுப் பாடியபடியே டான்ஸும் ஆட வேண்டும். முடிவில் மணமகளுக்கு யாரை பிடித்திருக்கிறதோ அவனுக்கு மாலை இடுவாள்!Post a Comment

Protected by WP Anti Spam