ப்ரைடல் ஜுவல்லரி செட்!!(மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 52 Second

திருமணம் என்றாலே மணப்பெண் அணிவதற்கான ஆபரணங்களின் தேர்வென்பது திருமணத்தில் மிகவும் முக்கியமான நிகழ்வாக அமைகிறது. முன்பெல்லாம் முழுவதும் தங்கத்தால் செய்த ஆபரணங்கள் அல்லது தங்கத்தில் பல வண்ணக் கற்கள் பதித்த நகைகளே மணப் பெண்ணிற்கான ஆபரணத் தேர்வாக இருக்கும். ஆனால் இப்போதைய லேட்டஸ்ட் டிரெண்ட் முழுவதும் மாறியுள்ளது என்கின்றனர் சென்னையில் 45 ஆண்டுகளைக் கடந்து இயங்கி வரும் NAC ஜுவல்லர்ஸ்.

மணப் பெண் நகையாக நெக்லஸ், ஆரம், ஒட்டியாணம், கடியம் (வங்கி), வளையல், நெத்திச்சுட்டி. ஜடை பில்லை என அவர்கள் விருப்பத்திற்கேற்ப தேவையைப் பொறுத்து தனித்தனியாகவும் எடுக்கிறார்கள், செட் நகைகளாகவும் எடுக்கிறார்கள்.செட் நகைகளைப் பொறுத்தவரையில், டெம்பிள் ஜுவல்லரி என்னும் பெயரில் கோயில்களில் உள்ள சிற்பங்கள், கடவுள்களின் உருவங்களை நகைகளில் வடிவமைக்கிறோம். இது நகாஸ் வேலைப்பாடு என அழைக்கப்படுகிறது. இத்தகைய ஆபரணங்கள் முழுக்க முழுக்க கை வேலைப்பாடுகளால் உருவாக்கப்படுகிறது.

இது முழுவதும் பாரம்பரிய மாடல். இப்போதுள்ள மணப் பெண்கள், அடர்த்தியான மஞ்சள் கலரில் உள்ள ஆபரணங்களைப் பெரும்பாலும் விரும்புவதில்லை. அதிகம் டல் பாலிஷ் உள்ள, ப்ரௌனிஷ் கலர் ஆபரணங்களையே பெரிதும் விரும்புகின்றனர். இந்த வகை ஆபரணங்களிலும் விலை மதிப்புள்ள கற்கள் பதிக்கப்பட்டிருக்கும். எந்தக் கடவுளை பதிக்கிறார்களோ அதே கடவுள் தோடு, வளையல், நெக்லஸ், ஆரம், அங்கி, நெத்திச் சுட்டி, ஒட்டியாணம் என அனைத்து நகைகளிலும் இடம் பெற்றிருக்கும். நியூ ஆன்டிக் மற்றும் ஓல்ட் ஆன்டிக் இரண்டுமே இதில் உள்ளன‌. நூறு ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய நகைகளை அப்படியே வாங்கி அதன் பழமை மாறாமல் மெருகேற்றி வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறோம்.

டிரெடிஸ்னல் செட் நகைகளில் முத்து, செர்க்கான் ஸ்டோன்ஸ், குந்தன், ரூபி, எமரால்ட் போன்ற கற்கள் பதிக்கப்பட்டிருக்கும். மொத்த செட்டும் தோராயமாக 850 கிராமில் துவங்குகிறது. இதன் விலை 40 முதல் 50 லட்சம் வரை இருக்கும். நகாஸ் செட் நகைகளில் மொத்த எடை ஏறக்குறைய 1 கிலோவில் இருக்கும். இதன் மதிப்பு 50 லட்சத்தை தாண்டும்.

50 முதல் 60 கிராம் எடையில், 2 லட்சத்திற்குள் வருகிற மாதிரி மினி ப்ரைடல் செட் என்கிற மினிமம் செட் ஒன்றையும் மணப்பெண்களுக்காக உருவாக்கியுள்ளோம். இதில் ஒரு ஆரம், நெக்லஸ், வளையல் இடம் பெற்றிருக்கும். குறைந்தது 500 கிராமில் துவங்கி, அதிகபட்சம் ஒன்றரைக் கிலோ வரை ப்ரைடல் செட் எங்களிடம் உள்ளது. இதன் விலை 15 லட்சத்தில் துவங்கி 20 லட்சம் வரை தோராயமாக இருக்கும்.

சோக்கர்ஸ் என அழைக்கப்படும் கழுத்தை ஒட்டி அணியும் பிராட் நெக்லஸ், நெத்திச்சுட்டி, ஸ்டெட், பேங்கிள் இதுவும் ஒருவித லேட்டஸ்ட் டிரெண்ட். இதில் ஆரம் வராது.எங்களிடம் திருமணப் பெண்களுக்கான மினிமம் பட்ஜெட்டில் இருந்து மேக்ஸிமம் தேவைகள் வரை எல்லா பட்ஜெட்டிலும் ப்ரைடல் நகைகள் கிடைக்கும். தேவைக்கேற்ப தேர்வு செய்துசெய்யலாம். பட்டுச் சேலையைக் கொண்டு வந்து அதற்கு ஏற்ப மேட்சிங் பார்த்து, ரூபி, எமரால்ட், வைரம் பதித்த ப்ரைடல் நகைகளை வாங்கும் வாடிக்கையாளர்களும் இருக்கிறார்கள். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ற நகைகளையும், அவர்கள் விரும்பும் டிசைனுக்கேற்ப மிகக் குறைந்த கால அளவில் தயாரித்து தருகிறோம்.

தங்கத்தைப்போன்றே டைமண்ட் ஜுவல்லரியிலும் ப்ரைடல் செட் வருகிறது. என்னவெல்லாம் தங்கத்தில் உள்ளதோ அதெல்லாம் அப்படியே வைரத்திலும் உள்ளது. டைமண்ட் ப்ரைடல் ஜுவல்லரியும் இப்போதைய லேட்டஸ்ட் டிரெண்ட்தான்.மணமகனுக்கு என தங்கத்தால் ஆன டர்பன், ப்ரேஸ்லெட், ஜிப்பா பட்டன் இவையெல்லாம் கிடைக்கும்.

மாடல் கோர்
ஆர்டினேட்டர்: நந்தினி
மேக்கப்: ஃபாத்திமா

என்.ஏ.சி ஜுவல்லர்ஸ் கிளைகள் தியாகராய நகர், மைலாப்பூர், அண்ணா நகர் உட்பட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விஜயவாடா என சேர்த்து மொத்தம் 11 கிளைகள் உள்ளன. ரிவைண்ட்(Rewind) கலெக் ஷன் எனும் பெயரில் பழைய காலத்து பாரம்பரிய நகைகளை விற்பவரிடம் பெற்று அதன் பழமையினை மாற்றாமல் கூடுதலாக தங்கம் சேர்த்து, ஒரு சில மாற்றங்களுடன் பொலிவேற்றி பழமை மாறாமல் விற்பனைக்கு வழங்குவது இவர்களின் சிறப்பு. குழந்தைகளுக்கான ஆபரணங்களுக்கு என Young ones பிரிவுகளும், வேலைக்குச் செல்லும் பெண்கள் அணிய அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய, எடை குறைவான Breeze என அழைக்கப்படும் லைட் வெயிட்டட் ஜுவல்லரி கலெக் ஷன் பிரிவுகள் இவர்களின் சிறப்பம்சம்.

செரீனா, மாடலிங்

என் சொந்த ஊர் கேரளா. பெங்களூரு மற்றும் குவைத்தில் படித்தேன். எம்.பி.ஏ. முடித்துள்ளேன். சொந்தமாக கார் உதிரி பாகங்கள் விற்பனை நிறுவனம் ஒன்றை பெங்களூருவில் அப்பாவுடன் இணைந்து நடத்தி வருகிறேன். 2009ல் இருந்து மாடலாக உள்ளேன். நியூயார்க்கில் உள்ள மிகப் பெரிய ஏஜென்சியான போர்ட் சூப்பர் மாடலாக இந்தியாவில் இருந்து தேர்வானேன். அதன் பிறகு டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் மும்பைக் கிளையில் ஓர் ஆண்டு கான்ட்ராக்ட் மாடலாக இருந்தேன். இந்தியாவின் மிகப் பெரிய அழகு சாதனப் பொருட்களின் நிறுவனங்கள், கேரளாவில் உள்ள நகைக் கடை விளம்பரங்களிலும் மாடலாக இருந்துள்ளேன். தற்போது திரைப்படங்களில் நடிக்கும் முயற்சியில் உள்ளேன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெற்ற குழந்தையை காலால் மிதித்து கொலை செய்த தாய்!!(உலக செய்தி)
Next post உண்மையான 5 மர்மமான உயிரினங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள்! (வீடியோ)