குற்றமும் உளவியலும்!!(மகளிர் பக்கம்)

Read Time:5 Minute, 36 Second

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கெதிராக கடுமையான சட்டங்கள், கடுமையான தண்டனைகள் ஏற்படுத்தினாலும் குற்றச்சம்ப‌வங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகில் உள்ள பரதூர் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி வைதீஸ்வரியை மணிகண்டன் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறை மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் குறித்து ஒரத்தூர் காவல் நிலைய அதிகாரியிடம் பேசிய போது, “ஏப்ரல் 2ம் தேதி சிறுமி வைதீஸ்வரியின் பெற்றோர் பெண்ணை காணவில்லை என்று புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தோம். புகார் அளிக்கப்பட்ட மறுநாள் பரதூர் சாவடி பஸ் நிறுத்தத்தில் இருந்து பரதூருக்கு செல்லும் சாலையோரம் முட்புதரில் வைதீஸ்வரி பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மணிகண்டன் என்பவர் வைதீஸ்வரியை காதலித்து வந்ததாகவும், ஆசை வார்த்தை கூறி அவர் இணங்க மறுத்ததால், பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று கொன்றதும் விசாரணையில் தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தோம்” என்று தெரிவித்தார். இது போன்ற கொடூர சம்பவங்களின் உளவியல் பின்னணி குறித்து பேசினார் மனநல மருத்துவர் குறிஞ்சி. “சிறு வயதில் இருந்தே தான் நினைத்தது நடக்கவேண்டும் என்கிற பிடிவாதத் தன்மையோடு வளர்கிறார்கள்.

இப்படி செய்தால் அதனுடைய விளைவுகள் என்ன என்பதை யோசிக்காமல் செயல்படக்கூடிய முரட்டு குண‌முடையவராக இருக்கலாம். இப்படி உள்ளவர்களை இம்பல்ஸ் கண்ட்ரோல் டிஸ்ஆர்டர் உள்ளவர்கள் என்று சொல்லுவோம். இதனால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் சிறு வயது வாழ்க்கையை பார்த்தால் பூச்சிகளை துன்புறுத்துவது, திருடுவது, பொய் சொல்வது, போதைப் பொருட்கள் பயன்படுத்துவது என சமூகம் தவறான செயல் என்று சொல்லக்கூடிய அனைத்து வேலைகளையும் செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள்.

இவர்களை போன்றவர்களுக்கு தன்னுடைய உணர்வுகளை மட்டுமே யோசிக்க தெரிந்தவர்களாக இருப்பார்கள். அடுத்தவர்களின் உணர்வுகளை மதிக்கமாட்டார்கள். இப்படியான மனநிலையில் இருப்பவர்கள், தான் விரும்புவது தனக்கு கிடைக்கவில்லை எனும் போது கொலை செய்யும் அளவிற்கு வக்கிரம் கொண்டவர்களாக மாறிவிடுகிறார்கள். இதில் இன்னொரு பிரிவினரும் உள்ளனர். கோபத்தில் தவறு செய்து விட்டு அதன் பிறகு வருத்தப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். இப்படியானவர்கள் மிகக்குறைவு.

வைதீஸ்வரி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் இந்த இரண்டு வகையில் ஏதோ ஒரு வகையை சேர்ந்தவராக இருக்கலாம். சம்பந்தப்பட்ட அந்த நபரின் பெற்றோர்கள் சிறு வயதிலே அவருடைய நடவடிக்கையை கண்காணித்து முறையான உளவியல் ஆலோசனை கொடுத்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது. சமூகத்தில் பாலியல் குறித்த விழிப்புணர்வு அதிகமாக தேவைப்படுகிறது. பாலியல் குறித்து பேசுகிறவர்களை மிருகத்தை பார்ப்பதுபோல இந்த சமூகம் பார்க்கிறது.

இதனால் எங்கு பேசுவது எப்படி புரிந்து கொள்வது என்று தெரியாமல் திருட்டுத்தனமான, புரிதல் இல்லாத தவறான செயல்களில் ஈடுபடுகின்ற தேவை அவர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. பாலியல் குறித்த எந்த விழிப்புணர்வும் இல்லாத காரணத்தால் பெண் உடல் கவர்ச்சிப் பொருளாக பார்க்கப்பட்டு தன்னுடைய உணர்வுகளை கட்டுப்படுத்த தெரியாமல் பாலியல் வன்முறையில் முடிகிறது. எதிர்காலத்தில் இது போன்ற குற்றங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால் பெற்றோர்கள் பாலியல் குறித்து வயதிற்கு ஏற்ற புரிதலை அவர்களுக்கு ஏற்படுத்த‌வேண்டும்” என்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இராவணன் வாழ்ந்த இடம்!(வீடியோ)
Next post வட – தென் கொரிய இணைப்பு: முடிந்தும் முடியாத கதை!!(கட்டுரை)