மோகன்லாலுடன் 6 ஆண்டுக்கு பிறகு ஜோடி சேரும் கனிகா !!(சினிமா செய்தி)

Read Time:1 Minute, 44 Second

பைவ் ஸ்டார், வரலாறு போன்ற படங்களில் நடித்தவர் கனிகா. மலையாள படங்களிலும் நடிக்கச் சென்றவர் திடீரென்று திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். திருமணத்துக்கு முன்பைவிட திருமணம் ஆன பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. தமிழ், மலையாள படத்தில் வாய்ப்பு வந்தபோதும் அதிக வாய்ப்பு மலையாள படத்தில்தான் தரப்படுகிறது. தற்போது தமிழில் ‘பேரன்பு’ படத்தில் மம்மூட்டியுடன் நடித்திருக்கிறார். தவிர மலையாளத்தில் மேலும் 2 படங்களில் நடித்து வருகிறார். புதிதாக மோகன்லால் நடிக்கும் படத்திலும் தற்போது கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ரஞ்சித் இயக்குகிறார்.

கிறிஸ்டியன் பிரதர்ஸ், ஸ்பிரிட் என 2 படங்களில் மோகன்லாலுடன் ஏற்கனவே கனிகா நடித்திருந்தாலும் கடந்த 6 வருடங்களாக அவரது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 3வது முறையாக மோகன்லாலுடன் இணையும் சந்தர்ப்பத்தை கனிகாவும் மகிழ்ச்சி பொங்க உறுதி செய்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு லண்டனில் நடப்பதால் மோகன்லாலுடன் அவர் லண்டன் சென்றிருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகையை 2-வது திருமணம் செய்த இசையமைப்பாளர்… !!(சினிமா செய்தி)
Next post ஹாலிவுட் சூப்பர் மேன் கதாநாயகி திடீர் மரணம் !!(சினிமா செய்தி)