கல்லூரி மாணவியாக நடிக்க தயங்கிய தன்ஷிகா !!(சினிமா செய்தி)
பிரசன்னா, கலையரசன், தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே நடித்துள்ள படம், காலக்கூத்து. மே 25ம் தேதி ரிலீசாகும் இந்தப் படம் குறித்து இயக்குனர் நாகராஜன் கூறியதாவது: மதுரை கதைக்களம். 2 இளைஞர்களுக்கான நட்பு வட்டத்திற்குள் உறவுகளும், நண்பர்களும், சமூக காரணிகளும் எப்படி புகுந்து விளையாடுகிறது என்பதை சொல்லும் படம் இது. பிரசன்னா பைக் ஷோரூம் ஊழியராகவும், கலையரசன் வேலை தேடும் இளைஞனாகவும், தன்ஷிகா கல்லூரி மாணவியாகவும் நடித்துள்ளனர். கல்லூரி மாணவியாக நடிப்பதில் தன்ஷிகாவுக்கு தயக்கம் இருந்தது. காரணம், இதுவரை அவர் கல்லூரி மாணவியாக நடித்ததில்லை. மெச்சூர்டான கேரக்டர்களில் நடிப்பதால், தனக்கு வேறொரு இமேஜ் இருக்கிறது என்று சொல்லி தயங்கினார். நாங்கள்தான் தொடர்ந்து அவரை வற்புறுத்தி நடிக்க வைத்தோம்.