நல்ல படங்களுக்கு வரவேற்பு இல்லை என்றால் கோபம் வரும் : உதயநிதி ஸ்டாலின் பேச்சு !!(சினிமா செய்தி)
ஒரு குப்பை கதை பட பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் உதயநிதி ஸ்டாலின் பேசியது: ரெட் ஜெயன்ட் மூவிஸ் தொடங்கி 10 ஆண்டுகள் ஆகிறது. மைனா படம் பார்க்கும்போது எப்படியொரு பாதிப்பு ஏற்பட்டதோ, அதுபோன்ற பாதிப்பை இந்த படம் ஏற்படுத்தும். தப்பான படங்கள் எடுக்கும்போது, எவ்வளவு திட்டினாலும் சகித்துக்கொள்கிறோம். அதுபோல், நல்ல படங்கள் கொடுக்கும்போது அதை வரவேற்கவில்லை என்றால் கோபம் வருகிறது.
எதற்கு நல்ல படங்கள் எடுக்க வேண்டும் என்று நினைக்க தோன்றுகிறது. தினேஷ் மாஸ்டர் இமேஜ் பார்க்காமல் நடித்துள்ளார். கொஞ்சம் எதிர்மறை குணங்கள் கொண்டது ஹீரோயின் கேரக்டர். மற்ற நடிகைகள் நடிக்க தயங்குவார்கள். ஆனால், மனீஷா துணிச்சலுடன் நடித்துள்ளார் என்றார். விழாவில் சிவகார்த்திகேயன், ஆர்யா, ஸ்ரீகாந்த், தினேஷ், மனீஷா யாதவ், அமீர், சுசீந்திரன், பாண்டிராஜ், எழில், சீனு ராமசாமி, தயாரிப்பாளர் அஸ்லம், இயக்குனர் காளி ரங்கசாமி, இசை அமைப்பாளர் தீபன் சக்ரவர்த்தி கலந்துகொண்டனர்.
Average Rating