இலங்கை தமிழ் இளைஞன் லண்டனில் வெட்டிக்கொலை!!
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து தென்மேற்கு லண்டனில் வசித்து வந்த தமிழ் இளைஞன் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று (20) Mitcham பகுதியில் உள்ள வீதியில் அருணேஷ் தங்கராஜா என்ற 28 வயதுடைய இளைஞன் இவ்வாறு இனந்தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அதிகாலை 3.30 மணியளவில் அவசர உதவிப்பிரிவு பொலிஸார் அவரை மீட்டு காப்பாற்ற முயற்சித்த போதும், அவர் சிகிச்சை பலனின்றி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தக் கொலை தொடர்பான தடயவியல் ஆய்வுகளை ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் 44 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, தெற்கு லண்டன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை லண்டனில் 65 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.