By 31 May 2018 0 Comments

பல நன்மைகளை தரும் மூலிகைப்பொடி பஞ்சகர்பம் !!

கர்ப்புற வாழ்க்கையில் இயற்கையோடு ஒன்றிணைந்து வாழும் சூழலை நாம் இழந்து வருகிறோம். இதனால் பல்வேறு நோய் தாக்குதலையும் சந்திக்க நேரிடுகிறது. பெரும்பாலும் சம்பாதிக்கும் பணத்தை மருத்துவமனைக்கே செலவிடும் நாம் முடிந்தவரை சில இயற்கையான முறையை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவதன் மூலம் நமது உடலை நாம் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். நாம் அன்றாடம் குளியலுக்கு பயன்படுத்தும் ஷாம்பூக்கு பதிலாக பஞ்சகர்பம் எனும் மூலிகைப் பொடியை பயன்படுத்துவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும் என்கிறார் சித்த மருத்துவர் சதீஷ்.

பஞ்சகர்பம் குறித்து மேலும் பல அரிய தகவல்களை நமக்கு தெரிவித்தார். “பொதுவாகவே நமது உடல் இயக்கமானது நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் மூலக்கூறுகளால் இயங்கக்கூடியது. இதே மூலக்கூறுகளை அடிப்படையாக கொண்டு வளரும் இயற்கை தாவரங்களை கொண்டு செய்யப்படுவதே பஞ்சகர்பம் எனும் மூலிகைப்பொடி. இந்த மூலிகைப்பொடியை நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் ஷாம்பூக்கு பதிலாக பயன்படுத்த வேண்டும்.

தமிழர்களின் அன்றாட வாழ்வில் இந்த மூலிகைப்பொடி பயன்பாட்டில் இருந்திருக்கிறது.. அறிவியல் வளர்ச்சியில் சோப்பு, ஷாம்பு வந்த பிறகு இதை நாம் மறந்துவிட்டோம். நெல்லி வற்றல் மண் சார்ந்தது, வெண்மிளகு நீர் சார்ந்தது, கடுக்காய் தோல் தீ சார்ந்தது, கஸ்தூரி மஞ்சள் காற்று சார்ந்தது, வேப்பம் வித்து ஆகாயத்தை சேர்ந்தது. இந்த 5 மூலப்பொருட்களை உள்ளடக்கியதால் இதை பஞ்சகர்பம் என்று அழைக்கிறோம்.

இயற்கையாகவே நமது உடலின் சுவாசமானது மண் சார்ந்து ஒன்றரை பங்கு, நீரில் இருந்து ஒன்னேகால் பங்கு,காற்று சார்ந்து முக்கால் பங்கு, ஆகாயம் அரை பங்கு, தீயிலிருந்து 1 பங்கு ஆகிய அடிப்படையில் சுவாசித்துக்கொண்டிருக்கிறோம். இதை அடிப்படையாக கொண்டுதான் மேலே குறிப்பிட்ட மூலக்கூறுகளின் அளவில் நாம் எடுத்து தயாரிக்க வேண்டும். இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து பொடி செய்து சுத்தமான பாலில் கலந்து தலைக்கு தேய்த்து அரைமணிநேரம் ஊறவைத்து குளிக்க வேண்டும்.

இந்த மூலக்கூறுகள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கக்கூடியவை, வீட்டில் இருந்தபடியே நாம் இதை தயார் செய்து பயன்படுத்தலாம். இதில் உள்ள பபயன்களை பற்றி பார்ப்போம்.. நமக்கு தெரியாமல் நமது உடலில் ஒவ்வொரு மணிப் பொழுதும் பல செயல்பாடுகள் நடந்துகொண்டு இருக்கும். இயற்கை வாழ்வியல் முறையில் இருந்து நாம் விலகிவிட்டதன் விளைவாக நாம் பல நோய்களுக்கு ஆளாகிறோம். இதில் மிக முக்கியமாக, ஆட்டோ மென் டிஸ்சாடர், நான் இன்பெக்ஸ் டிசிஸ்,நான் கமிக்கபல் டிசிஸ், சர்க்கரை நோய், தைராய்டு, பிசிஓடி போன்ற நோய்தாக்குதல்கள் இந்த பிரச்சனையின் காரணமாவே ஏற்படுகிறது.

பஞ்சகர்பத்தை பயன்படுத்துவதன் மூலம் உடலில் உள்ள அனைத்து செயல்பாடுகளையும் சீரமைத்து உடல் சூட்டை கட்டுப்படுத்தி சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும். குறிப்பாக கோடை காலத்தில் பெரும்பாலானோருக்கு உடல் சூடு அதிகமாக இருக்கும். இதனால் சைனசைட்டிஸ் ஏற்படும். தலைநீர் கோர்வை, பின்நீர் கோர்வை, முன்நீர் கோர்வை, தலைபாரம், தும்மல், மூக்கிலிருந்து நீர்வடிதல் போன்ற பிரச்சனைகளை பஞ்சகர்பம் உடனடியாக சரிசெய்யும்.
மேலும் பல்வேறு ரசாயனங்கள் அதிகம் நிறைந்த ஷாம்பூவை பயன்படுத்தும் முடிகொட்டுதல் பிரச்சனை உள்ளவர்களுக்கு பஞ்சகர்பம் சிறந்த மருந்து.

இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு ஒரே வாரத்தில் முடிகொட்டுதல் நின்று விடும். இளைநரையை தடுக்கும் தன்மை இதற்கு உண்டு. பொடுகு தொல்லை நீங்கும். குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் தள்ளிப்போவது, வெள்ளை படுதல், சிறுநீர் தொற்று போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். தூக்கம் வராமல் அவதிப்படுகிறவர்களுக்கு நல்ல தூக்கம் வரும். தீராத கண் எரிச்சல் உள்ளவர்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். நாட்டு வழக்கத்தில் சில முக்கியமான வியாதிகளுக்கு இது போன்ற வெளிப்புற சிகிச்சை நல்ல தீர்வை கொடுக்கும்.

உதாரணமாக பச்சிளம் குழந்தைகளுக்கு வயிறு வலி என்றால் வசம்பு சுட்ட கரியை தொப்புள் குழியில் தடவும் போது வயிறு வலி சரியாகிறது அது போலதான் பஞ்சகர்பம் செயல்படுகிறது. இதை பிரச்சனை உள்ளவர்கள்தான் பயன்படுத்த வேண்டுமா என்றால் கிடையாது, நாம் அன்றாட வாழ்வில் ஷாம்புவிற்கு பதிலாக இதை பயன்படுத்தலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தலாம். முடிந்தவரை இயற்கையான முறையில் நமது உடலை நாம் பாதுகாப்பது என்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்” என்கிறார் சித்த மருத்துவர் சதீஷ்.Post a Comment

Protected by WP Anti Spam