நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்? (சினிமா செய்தி)
இவர்கள் நெருக்கமாக இருக்கும் படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்கள். இருவரும் காதலை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. காதல் கிசுகிசுக்கள் பரவுவதையும் பொருட்டாக கருதவில்லை.
அமெரிக்காவில் ஜோடியாக சுற்றிய படங்களை விக்னேஷ் சிவன் ஏற்கனவே தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அதன்பிறகு வி, என் என்ற ஆங்கில எழுத்துகளில் டீ சர்ட் அணிந்து கட்டிப்பிடித்து நின்றபடி படம் வெளியிட்டனர். பட விழாக்களுக்கும் ஜோடியாக வருகிறார்கள்.
சென்னையில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் நயன்தாரா 2 விருதுகளை பெற்றார். இப்போது அந்த விருதுகளுடன் நயன்தாராவை தன்னுடன் நெருக்கமாக வைத்து செல்பி எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அதில் “நயன்தாரா விருது பெற்றது பெருமையாக இருக்கிறது. பிளாக் அன்ட் ஒயிட் கண்ணு உன்னை பார்த்தால் கலரா மாறுதே, நம்ம எப்போது இப்படி விருதுகள் வாங்கி இந்த பிள்ளை கையில் கொடுக்கப் போறோமோ” என்ற வாசகங்களையும் பதிவு செய்துள்ளார்.
இந்த படம் வைரலாகி வருகிறது. நயன்தாரா-விக்னேஷ் சிவன் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வந்தன. இன்னும் சிலர் திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே வீட்டில் சேர்ந்து குடித்தனம் நடத்துகிறார்கள் என்று பேசினர். நிஜமாகவே திருமணம் செய்துகொண்டார்களா? இல்லையென்றால் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
Average Rating