10 நடிகர்களுடன் களம் இறங்கும் பார்த்திபன் !!(சினிமா செய்தி)

Read Time:1 Minute, 46 Second

பார்த்திபன் இயக்கத்தில் கடந்த 1993-ஆம் ஆண்டு வெளியான ‘உள்ளே வெளியே’ படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. ‘உள்ளே வெளியே’ படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்க பார்த்திபன் முடிவு செய்திருக்கிறார்.

இந்த படத்தின் கதை தயாராகி இருக்கும் நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்க இருக்கிறார். பிரபுதேவாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மம்தா மோகன்தாஸ், கிஷோர், எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில், பார்த்திபனுடன் நடந்த உரையாடலின் போது அவர் தெரிவித்ததாவது,

நான் தயாராக இருக்கிறேன். சரியான தயாரிப்பாளர் அமைவதற்காக பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்கிறது. உள்ளே வெளியே 2, நான், சமுத்திரகனி, கிஷோர் என்று 10 பலமான நடிகர்களுடன் களம் இறங்குகிறேன். எதையும் நகைச்சுவையுடன் சொல்வதுதான் என் பாணி. அது இந்த படத்தில் இருக்கும். என்னுடைய வழக்கமான படத்தை பார்க்கலாம். ஆனால் அதிர்ச்சியான ஒரு வி‌ஷயமும் படத்தில் உண்டு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post படுக்கை அறை விஷயத்தில் ஆண்களை கவர்வது எப்படி?(அவ்வப்போது கிளாமர்)
Next post திருமணத்தால் செக்ஸ் ஆர்வம் குறைகிறது!!(அவ்வப்போது கிளாமர்)