பயங்கரவாதிகள் பட்டியலில் எல்.ரீ.ரீ.ஈ. யினைச் சேர்ப்பதற்கு அவஸ்திரேலியா முஸ்தீபு

Read Time:2 Minute, 31 Second

Australia.Flag.1.jpgஎல்.ரீ.ரீ.ஈ. யினரை தங்களது பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துக் கொள்வது தொடர்பாக அவுஸ்திரேலியா உண்ணிப்பாக ஆராய்ந்து வருவதாக அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலய வெகுசனத் தொடர்பு அதிகாரி இன்று தெரிவித்தார். எல்.ரீ.ரீ.ஈ. போன்ற பயங்கரவாதக் குழுக்களைத் தனிமைப்படுத்துவது சம்பந்தமாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து அவரிடம் வினவிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவில் சட்டபூர்வமான ஒரு அமைப்பாக எல்.ரீ.ரீ.ஈ. யினர் தொடர்ந்தும் இருந்து வந்தபோதிலும், எல்.ரீ.ரீ.ஈ. யிற்கு ஆதரவாக இயங்கும் ரீ.ஆர்.ஒ. போன்ற முன்னணி அமைப்புக்களுக்கு எதிரான செயற்பாட்டை அனைத்தும் வெளிப்படுத்தியுள்ளன.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 1267, 1373 ஆம் தீர்மானங்கள் அனைத்து நாடுகளிலும் இயங்கும் பயங்கரவாத அமைப்புக்களின் சொத்துகளை முடக்குமாறு கூறுகின்றன. இது எப்படிப்போனாலும், உலகின் சில பாகங்களில் பயங்கரவாத குழுக்கள் இயங்கவே செய்கின்றன. இலங்கையும் அமெரிக்காவும் ரீ.ஆர்.ஓ. வின் வங்கிக் கணக்குகளை ஏற்கனவே முடக்கியுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய தடையானது நிச்சயமாக எல்.ரீ.ரீ.ஈ. யினருக்கு ஒரு பெரும் நெறுக்குதலைக் கொடுக்கும். அவுஸ்திரேலியாவில் குற்றச் செயல்களில் ஈடுபடும் தனிநபர்கள் அல்லது பயங்கரவாத அமைப்புக்களுக்கு ஆதரவாக இயங்கும் அமைப்புக்களின் சொத்துக்களை முடக்குவதற்கான சட்டம் ஏற்கனவே அமுலில் உள்ளது. எல்.ரீ.ரீ.ஈ. யினர் தொடர்ந்தும் இரகசியமான முறையில் அவுஸ்திரேலியாவில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சந்தனமும், சாக்கடையும் கலந்து குரு… விட்டால்(?) குற்றமில்லையா????
Next post ரஷிய விண்கலம் மூலம் பெண் சுற்றுலா பயணி விண்ணில் பறந்தார்