By 25 August 2018 0 Comments

பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஐந்து மூலிகைகள்!!(மகளிர் பக்கம்)

காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு சுற்ற வேண்டிய எந்திரமயமான நகர வாழ்க்கையில் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை காக்க வேண்டியது அவசியம். எளிமையாக, மூலிகைகள் மூலம் உடல்நலத்தை காக்க வழி சொல்கிறார் கண்ணகி ராஜகோபால்.

‘‘எங்கள் வீட்டைச் சுற்றி நிறைய மூலிகைகள் வளர்க்கிறேன். இவை நம் பாரம்பரிய சொத்துக்கள். சாதாரண தலைவலி முதல் கொடுமையான புற்றுநோய் வரை அனைத்தையுமே மூலிகைகளை கொண்டு குணப்படுத்த முடியும்.தீர்க்க முடியாத நோய் களையும் மூலிகைகள் குணப்படுத்தும். ஆனால் பொறுமை அவசியம். ஏனெனில் இவை மெதுவாகத்தான் வேலை செய்யும். ஒரு சில வியாதிகளுக்கு கண்டிப்பாக பத்தியம் இருக்க வேண்டும். மக்கள் பத்தியம் என்றாலே பயப் படுகிறார்கள். பத்தியம் நோய்க்குதான் தவிர மருந்துக்கில்லை.

இதை புரிந்து கொள்ள வேண்டும். இப்போது மாறிவரும் சூழ்நிலையில் பல வியாதிகள் வரிசை கட்டி நிற்கின்றன. குடும்ப சூழ்நிலை காரணமாக பல பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள். பல பிரச்னைகளை சந்திக் கிறார்கள். மாதவிடாய் பிரச்னை, ரத்த சோகை, எலும்புத் தேய்மானம், தலைவலி, சரும நோய்கள்… இவ்வளவு பிரச்னைகளையும் தீர்ப்பதற்கு அற்புதமான மூலிகைகள் உள்ளன. எப்போதும் கம்ப்யூட்டரில் உட்காருவதால் இடுப்பு வலி, கண்களில் எரிச்சல், மூலநோய் ஆகியவை ஏற்படுகிறது. இந்த மூலிகைகளை நம் வீட்டிலேயே வளர்க்கலாம்.

எந்தவித பக்க விளைவுகளும் கிடையாது. உப்பு, புளி, காரம் குறைத்தாலே போதும். மாதவிடாய் பிரச்னைகள் பெண்களுக்கு ஏற்படும் பெரிய பிரச்னை மாதவிடாய் கோளாறுகள்தான். அதிக ரத்தப்போக்கு அல்லது மாதவிடாய் சரியாக வராமல் இருப்பது. கர்ப்பப்பையில் கட்டி, குழந்தையின்மை, வயிற்று வலி போன்ற பிரச்னைகளை அதிகமாக சந்திக்கிறார்கள். கர்ப்பப்பை நோய்களுக்கு கல்யாண முருங்கை பூக்களை கஷாயமாக செய்து சாப்பிட்டால் கர்ப்பப்பையில் உள்ள அழுக்கு நீங்கும். கர்ப்பப்பை பலமடையும்.

அதிக ரத்தப் போக்கு, வயிற்று வலி உள்ளவர்கள் அத்திப்பட்டை, அசோகப்பட்டை, நாவல் பட்டை ஆகியவற்றை எடுத்து கஷாயமாக செய்து சாப்பிடலாம். கிருமித் தொற்று இருந்தாலும் நீங்கிவிடும். குழந்தை இல்லாதவர்களுக்கு அற்புதமான மருந்து இது. சருமப் பிரச்னைகள் பெண்கள் வெளியில் செல்வதால் சுற்றுப்புற சூழ்நிலையால் தோல் சம்பந்தப்பட்ட நிறைய பிரச்னைகள் வருகின்றன. தோல்களில் செதில் செதிலாக கொட்டுவது. இதைப் போக்குவதற்கு பொன்னாவரை அருமை யான மருந்து.

இந்த இலையை அரைத்து தோல்களில் பூசிக்கொண்டால் தோல் பிரச்னை சரியாகும். கன்னங்களில் கரும் படை, கருவளையம் ஆகிய வற்றிற்கு கசகசாவை பால்விட்டு அரைத்து கன்னம், கண்களின் ஓரங் களில் பூசினால் அவை மறைந்து விடும் எலும்பு சம்பந்தமான நோய்கள் எலும்புத் தேய்மானம் என்பது கால்சியம் சத்துக் குறைபாட்டால் வருவது. இதைப் போக்குவதற்கு பிரண்டை ஒரு நல்ல தீர்வு. இதற்கு இன்னொரு பெயர் வஜ்ரவல்லி. வஜ்ரம் என்றால் உறுதியானது என்று அர்த்தம். பிரண்டையை துவையலாக செய்து சாப்பிட்டால் மூட்டு வலி, கைகால் அசதி ஆகியவை தீரும்.

கண் மற்றும் தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகள் சிலருக்கு எப்போதும் தலை வலி இருந்து கொண்டே இருக்கும். அவர்கள் திருநீற்றுப் பச்சிலை என்ற மூலிகையுடன் பச்சைக் கற்பூரம் சேர்த்து அரைத்து பற்றாக போடலாம். தலைவலி உடனே நிற்கும். கண் பிரச்னைகளுக்கு நேத்திரப்பூண்டு என்ற மூலிகை உண்டு. இதை நல்லெண்ணெயில் போட்டு, 21 நாட்கள் வெயிலில் வைத்து எடுத்து, வடிகட்டி இரண்டு சொட்டு கண்களில் விட்டு வந்தால் கண் சம்பந்தமான நோய்களும் குணமாகும்.

சர்க்கரை நோய் இப்போது சர்க்கரை நோய் இல்லாத வர்களே பெரும்பாலும் கிடையாது. இதை குணப்படுத்த தொட்டாற் சுருங்கி மிகவும் நல்லது. இதை வேரோடு பிடுங்கி சுத்தம் செய்து, காயவைத்து பொடியாக்கி தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் நீரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் மட்டுமல்ல… அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளும் குணமாகும்” என்கிறார்.



Post a Comment

Protected by WP Anti Spam