பெற்றோரே சிறந்த வழிகாட்டி(மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 1 Second

பள்ளிக்கல்வியை முடித்து கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் மாணவர்களுக்கு ஒருவித தயக்கம், பதற்றம், பயம் போன்றவை இருக்கும். சினிமாக்களில் காட்டுவதுபோல் இருக்குமோ அல்லது ஊடகங்களில் வரும் அசம்பாவித செய்திகளைப்போல் நமக்கும் நடந்துவிடுமோ என்ற கலக்கத்திலேயே, பெற்றோர்களும் இருப்பார்கள். இதுமாதிரியான சூழல்கள் எல்லாக் கல்லூரிகளிலும் இருக்கின்றனவா, இதிலிருந்து நாம் தெளிவுபெறுவது எவ்வாறு என விளக்குகிறார் பேராசிரியர் சுதாகர் ஜே.மிடாஸ். “கல்லூரியில் சேர்ந்திருக்கும் தன் மகளையோ மகனையோ எண்ணி பதற்றம், மகிழ்ச்சி, பயம் எனும் அனைத்தையும் ஒன்றிணைந்து காணப்படுவர் பெற்றோர்கள். புதிதாக சேர்ந்த கல்லூரியில் உங்கள் குழந்தைகளிடம் அவர்களுடைய நட்புக்களைப் பற்றி தினமும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு கல்லூரியில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படின் அதனைத் தயங்காமல் உங்களிடம் எடுத்துக்கூறும்படியும், அதனைத் தீர்க்கும் வழிமுறைகளுக்கு நீங்கள் அவர்களுக்கு உதவுவீர்கள் என்ற நம்பிக்கையையும் உத்தரவாதத்தினையும் உங்கள் குழந்தைகளுக்கு வழங்குங்கள்.

செல்போனை் வீட்டில் மட்டும் பயன்படுத்த அனுமதியுங்கள். பல கல்லூரிகள் செல்போன் பயன்படுத்த தடை விதித்துள்ளன. அவர்கள் செல்லும் வலைத்தளங்கள் சரியானவைதானா என்று அவ்வப்போது கண்காணியுங்கள். அதற்காக அவர்களின் சுதந்திரத்தில் அதிகமும் தலையிடுவதாக அவர்கள் எண்ணாதபடி கத்திமேல் நடக்கும் வித்தை இது. திடீரென குழந்தைகளின் செயல் பாடுகளில் மாற்றம் ஏற்பட்டால் (சோகம், மகிழ்ச்சி, தனித்திருத்தல்) அதற்கான காரணத்தை அறிந்து உடனுக்குடன் சரிசெய்யுங்கள். உங்கள் பிள்ளைகளின் பேராசிரியர்களோடு நல்லுறவைப் பேணுங்கள். அவர்கள் விருப்பப்படும் துறைகளில் சேர்ந்து பயில அனுமதியுங்கள். உங்கள் கனவுகளை அவர்கள் மீது திணிக்க வேண்டாம். எல்லா பெற்றோரும் தனது குழந்தை முதலிடத்தைப் பெற வேண்டும் என்றே விரும்புகின்றனர். முதலிடம் ஒன்றே ஒன்றுதான். எனவே, படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என நச்சரிக்காதீர்கள். உங்கள் குழந்தையின் தனித்திறனை கண்டறிந்து அத்துறையில் அவர்களை ஊக்கப்படுத்தி முதலிடம் கொண்டுவர முயற்சி செய்யுங்கள். படிப்பு மட்டுமல்லாது, ஏதேனும் ஒரு கள விளையாட்டில் (பேட்மிண்டன், கிரிக்கெட், கபடி)ஈடுபடச் செய்யுங்கள். அப்போதுதான் உடல் ஆரோக்கியத்திலும் சிறந்து விளங்கு வார்கள். நூலகங்களைப் பயன்படுத்த அறிவுறுத் துங்கள். சாலைவிதிமுறைகளைக் கற்றுத் தாருங்கள். அதன் அவசியத்தையும் தெரியப்படுத்துங்கள்.

பள்ளியில் கொடுக்கப்பட்ட பாடங்களைப் படித்து மனனம் செய்து தேர்வில் எழுதிவிட்டாலே அவர் சிறந்த மாணவர். ஆனால், கல்லூரியிலோ கொடுக்கப்பட்ட தனது பாடத் திட்டங்களையும் தாண்டி நூலகத்தையும் பயன்படுத்தி பேராசிரியர்களின் ஆலோசனையோடு தங்களது துறை அறிவை வளர்த்துக்கொண்டு சாதனைப் படைத்துள்ளவர்களே சிறந்த மாணவர்கள் ஆவார்கள். ஆகவே உங்கள் பிள்ளைகளிடம் நூலகத்தின் அருமையை எடுத்துக் கூறுங்கள். பாடத்தில் ஏதேனும் சந்தேகங்கள் வந்தால், பேராசிரியர்களை தயக்கமின்றி அணுகினால் வரும் மாணவர்களை மகிழ்ச்சியோடு வழிநடத்தி தங்களது அனுபவங்களையும் எடுத்துரைப்பார்கள்.

எனவே தயக்கம் சிறிதும் இன்றி அவர்களை அணுக அறிவுறுத்துங்கள். பிள்ளைகளின் பன்முகத்திறனை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புகளை வழங்கும் களம் கல்லூரிகளே. கல்லூரி வாழ்க்கை மாணவர்கள் மனதில் ஊக்கமூட்டி அவர்கள் சென்று அடைய வேண்டிய இலக்கினை நிர்ணயித்துக் கொள்ள தூண்டுவதன் மூலம் அவர்களை சாதனையாளர்களாக மாற்றுகிறது. குடும்ப வாழ்வையும், பணி வாழ்வையும் எப்படி சீர்பட வாழ்வது என்று அறிந்திருக்கின்ற நல்ல பண்பாளர்களை உருவாக்கும் இடம் கல்லூரிதான். கல்லூரியில் புது மாணவராக உங்கள் பிள்ளை நுழையும் போது வைரம் போன்ற மதிப்பு மிக்க வாய்ப்புகளை உள்ளடக்கிய ஒரு சுரங்கக் கதவினை அவர்களுக்குத் திறந்துவிடுகிறீர்கள் என்பதை நினைவில் வையுங்கள்” என்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post படுக்கையறையில் படிகள் பல ?(அவ்வப்போது கிளாமர்)
Next post திருமணமான தம்பதிகளுக்கு… !!(அவ்வப்போது கிளாமர்)