கால்பந்தின் ரசிகையான குரோஷியா அதிபர்!!(மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 51 Second

வண்ணமயமான உலகக் கோப்பை கால்பந்து திருவிழா அட்டகாசமாக நடந்து முடிந்திருக்கிறது. கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்களின் கணிப்பையும் பொய்யாக்கி பிரான்ஸ் அணி வெற்றிக் கோப்பையை தன்வசப்படுத்தியுள்ளது. இந்த உலகக் கோப்பையில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் ரசிகர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்கு மத்தியில் சாதாரண ஒரு கால்பந்தாட்ட ரசிகரைப்போல் போட்டியை நேரில் கண்டு களித்துள்ளார் ஒரு பிரபலம். அவர் குரோஷியா நாட்டின் பெண் அதிபர் கோலிண்டா கிராபர் கிடாரோவிக்.

அதுவும் அந்நாட்டு வீரர்களின் உடையுடன் பார்வையாளர்களின் வரிசையில் அமர்ந்து கைதட்டி குரோஷியா வீரர்களை உற்சாகப்படுத்தினார். இவரின் நேரடி பார்வையால்தான் என்னவோ குரோஷியா அணி இறுதிப் போட்டிவரை சென்றது. கால்பந்து வரிசையில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் குரோஷியா அணி ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் பலம் வாய்ந்த அணிகளான அர்ஜென்டினா, ரஷ்யா, இங்கிலாந்து அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப்போட்டியில் பிரான்சிடம் தோல்வியடைந்து கோப்பையை பறிகொடுத்தது. இந்த உலகக் கோப்பையில் நடைபெற்ற காலிறுதிப் போட்டி, அரையிறுதிப்போட்டி மற்றும் இறுதிப் போட்டியை நேரில் பார்ப்பதற்காக விளையாட்டு மைதானத்துக்கே நேரில் சென்றார் 50 வயதாகும் குரோஷியா பெண் அதிபர் கோலிண்டா. அதுவும் அந்நாட்டு அணி வீரர்கள் பயன்படுத்திய உடையை அணிந்துகொண்டு அவர் சென்றதுதான் ஹைலைட்!
அதிபரின் வருகையால் உற்சாகமடைந்த குரோஷியா அணி வீரர்கள் எதிரணி கோல் கம்பங்களை அவ்வப்பொழுது முற்றுகையிட்டனர்.

அதிபரும் கைதட்டி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகளில் குரோஷியா அணி வெற்றி பெற்றதும் ஒவ்வொரு வீரரையும் கட்டித் தழுவி தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். தோல்வி அடைந்த வீரர்களுக்கும் ஆறுதல் சொன்னார். அன்றிரவு குரோஷியா அணி வீரர்களுடன் ஒன்றாக உணவருந்தினார். உயர் பதவியில் உள்ள அதிபர் என்பதை காட்டிக்கொள்ளாமல் அவர் சகஜமாக பழகியது வீரர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியிடம் தோற்றாலும் குரோஷியா கேப்டன் லுகா மோட்ரிக்குக்கு சிறந்த வீரருக்கான ‘தங்கக் கால்பந்து விருது’ கிடைத்தது. அப்பொழுது அதிபர் கோலிண்டா அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அந்த நேரத்தில் இருவரும் கண்கலங்கி விட்டனர். இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமானுஷ்யம்! சித்தர்கள் போன்ற மிகச் சிறிய குள்ள மனிதர்கள்! அடர்ந்த காட்டில் பதிவான அதிர்ச்சி வீடியோ!
Next post யார் இந்த அபிராமி? கொடூர கொலைக்கான காரணம் என்ன?(வீடியோ)