பேருந்து கவிழ்ந்து கோர விபத்து – 7 குழந்தைகள் உட்பட 57 பேர் பலி!!(உலக செய்தி)
தெலுங்கானா மாநிலம் கொண்டாகட்டு மலைப்பகுதியில் பயணிகளுடன் வந்து கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மலைப் பள்ளத்தாக்கில் இருந்து பேருந்து கவிழ்ந்து விழுந்தது.
இந்த விபத்து குறித்து அம்பியூலன்ஸ் மற்றும் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டனர்.
இந்த கோர விபத்தில் 7 குழந்தைகள் உள்பட 52 பேர் வரை இறந்ததாக முதல்கட்டமாக தகவல் வெளியானது. விபத்தில் காயமடைந்து 20-க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள 5 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதையடுத்து, பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது.