மினியேச்சர் ஆர்ட்டில் கின்னஸ் முயற்சி!!(மகளிர் பக்கம்)

Read Time:4 Minute, 13 Second

மைக்ரோ ஆர்ட் என்று சொல்லக்கூடிய நுண்கலை திறமையால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் சென்னையை சேர்ந்த பொறியியல் பட்டதாரி விஜயபாரதி. பாயின்ட் 5 மில்லி மீட்டர் பென்சிலில் A-Z வரை வடிவமைத்து கின்னஸ் சாதனை நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளார். நுண்கலை மூலம் வீட்டில் இருந்தே எப்படி சம்பாதிக்கலாம் என்று தன்னுடைய அனுபவங்களை சொல்கிறார் விஜயபாரதி.“சிறு வயதில் இருந்தே ஓவியம் வரைவதில் எனக்கு ஆர்வம் அதிகம். அவ்வப்போது வால் பெயின்டிங் செய்து வந்தேன். கல்லூரி முடித்த பின்பு மைக்ரோ ஆர்ட் பற்றி சமூகவலைத்தளங்களில் பார்த்தேன். என்னுடைய நண்பர் ஒருவர் 7 வருடங்களாக மினியேச்சர் ஆர்ட் செய்து வருகிறார். அவரிடம் சில நுணுக்கங்களை கேட்டறிந்து முயற்சி செய்து 3 மாதங்களில் கற்றுக்கொண்டேன். மினியேச்சர் ஆர்ட்டில் 0.5 மில்லி மீட்டரில் பென்சிலில் யாரும் இதுவரை கின்னஸ் சாதனை செய்யவில்லை என்பதால் புதிதாக செய்யலாம் என்று A-Z வரை வரைந்து கின்னஸ் சாதனைக்கு அனுப்பி இருக்கிறேன்.

விளையாட்டாகத் தொடங்கினேன். ஒரு கட்டத்தில் மினியேச்சர் ஆர்ட் பொருட்கள் மக்களை கவர்ந்தது. வீட்டிற்கே வந்து வாங்கிச் செல்ல தொடங்கினர். சிலர் அவர்கள் விரும்பும் டிசைன்கள் செய்யச்சொல்லி ஆர்டர்கள் வரும், வாடிக்கையாளர்களின் விருப்பப்படி செய்து கொடுத்து வருகிறேன். இதற்கு முதலீடு பெரிய அளவில் இருக்காது. போதுமான வருமானம் எனக்கு கிடைக்கிறது. கொஞ்சம் பயிற்சியும் கிரேட்டிவிட்டியும் இருந்தால் போதும். பென்சிலில் ஆர்ட் செய்வதற்கு சாதாரணமாக பயன்படுத்தப்படும் பென்சில், ஜம்போ பென்சில், கார்பென்டர் பென்சில், ஒரு ஹாபி நைஃப் (அறுவைசிகிச்சை செய்ய பயன்படும் கத்தி) தேவைப்படும்.. வாடிக்கையாளர்கள் விரும்பும் டிசைன்களில் செய்து கொள்ளலாம். நமக்குத் தோன்றுகின்ற டிசைன்களையும் செய்து விற்பனை செய்யலாம்.விருப்பமானவர்களுக்கு பரிசுப் பொருளாக கொடுப்பதற்காக மைக்ரோ ஆர்ட் பொருட்களை ஆர்டர் செய்கிறார்கள்.

பென்சிலின் முனையில் செய்யப்படுவதால் கீழே விழுந்தால் உடைந்து விடும் என்பதால் கண்ணாடிப் பாத்திரத்தில் மற்றும் போட்டோ ஃபிரேம்களில் வைத்து கொடுக்கிறேன். வண்ணம் வேண்டும் என்று நினைப்பவர்கள் பெயின்டிங் செய்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் மினியேச்சர் ஆர்ட் கலைஞர்கள் மிகக்குறைவு என்பதால் மைக்ரோ ஆர்ட் பொருட்களுக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது. தற்போது கல்லூரி மாணவர்கள் இடையே மைக்ரோ ஆர்ட் பொருட்கள் டிரண்ட் ஆகி இருப்பதால் போதுமான வருமானம் கிடைக்கிறது. பெண்கள், மாணவர்களுக்கிடையே மைக்ரோ ஆர்ட் பயிற்சி கலையை வளர்ப்பதற்கு சிறப்புப் பயிற்சி வகுப்பு எடுத்து வருகிறேன்” என்கிறார் விஜய பாரதி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எல்லை தாண்டும் பயங்கரவாதம்!!(அவ்வப்போது கிளாமர்)
Next post தந்திரோபாய ஒற்றுமை!!(கட்டுரை)