அமெரிக்காவின் அரசியல் வரலாற்றை மாற்றும் 116 பெண்கள்!! (உலக செய்தி)

Read Time:6 Minute, 30 Second

அமெரிக்க பாராளுமன்றமான காங்கிரசின் 116 வது பதவியேற்பில், வரலாறு காணாத அளவு பெண் செனட்டர்கள் பதவியேற்கவுள்ளனர். இதையொட்டி, வரும் ஜனவரி 3 ஆம் திகதி வரலாறு படைக்க காத்திருக்கிறது அமெரிக்கா.

2016 ஆம் ஆண்டு, ஜனாதிபதி டிரம்ப் பதவியேற்ற பிறகு, லட்சக்கணக்கான மகளிர் அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்நாட்டின் இடைக்கால தேர்தல் நெருங்கிய சூழலில், ஜனநாயகக்கட்சி வேட்பாளராக களமிறங்கப் பல பெண்கள் விரும்பினர். அதற்கு முந்தைய ஆண்டு, அதே கட்சி பெண்களின் எண்ணங்களுக்கு எதிர்மாறாக இது அமைந்தது.

அமெரிக்காவில் 1992 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், அதிரடியாக பெண் செனட்டர்களின் எண்ணிக்கை இரட்டிப்பானது. அதற்கு பிற்கு, 2018 ஆம் ஆண்டை பெண்களின் ஆண்டு என்று பரிந்துரைக்கும் அளவிற்கு இது மாறியுள்ளது.

ஆக, அமெரிக்காவின் இடைக்கால தேர்தல் எவ்வாறு அந்நாட்டின் காங்கிரஸை மாற்றியுள்ளது என்று பார்ப்போம்.

1. கடந்த 2016 ஆம் ஆண்டு, 300 க்கும் மேற்பட்ட பெண்கள் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுத் தாக்கல் செய்தனர்.

2. ஆனால் 2018 இல், இந்த என்ணிக்கை 529 ஆக உயர்ந்தது.

3. அதில் 387 பேர் ஜனநாயக கட்சியினராகவும், 142 பேர் குடியரசு கட்சியினராகவும் இருந்தனர்.

4. ஆனால், அதில் பாதிக்கும் குறைவானவர்களுக்கே தங்கள் கட்சியினரால் தேர்தலில் நிறுத்தப்பட்டனர். அதில் 59 பேர் குடியரசு கட்சியை சேர்ந்தவர்களாகவும், 198 பேர் ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவர்களாகவும் இருந்தனர்.

5. தேர்தல் முடிவில் 116 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதில் ஜனநாயக கட்சியை சேர்ந்த 100 பேரும், குடியரசு கட்சியை சேர்ந்த 16 பேரும் உள்ளனர்.

6. ஏற்கனவே பதவியிலுள்ள 10 பெண் செனட்டர்களையும் சேர்த்தால், மொத்தமாக இனி காங்கிரசில் 126 பெண் உறுப்பினர்கள் இருப்பார்கள்.

7.இது மிகப் பெரிய மாற்றமாக பார்க்கப்பட்டாலும், ஆண்-பெண் இடையிலான வித்தியாசம் மிகப் பெரியதாகவே உள்ளது.

8. மொத்தமாக 126 செனட்டர்கள் இருந்தாலும், அமெரிக்க காங்கிரஸில் 409 ஆண் செனட்டர்கள் உள்ளனர். அதாவது, காங்கிரஸில் 76% செனட்டர்கள் ஆண்கள்.

ஆனால், 2018 தேர்தல் முடிவு, அமெரிக்கா முழுவதும் பெண் வேட்பாளர்களை வெற்றியடைய வைத்துள்ளது. வெற்றி பெற்றோர், காங்கிரஸை மாற்றி அமைக்க உதவத்தொடங்கியுள்ளனர்.

அமெரிக்காவின் இளம் பெண் செனட்டராக பொறுப்பேற்கவுள்ள அலக்சாண்ரியாவின் வயது 29 மட்டுமே.

போர்ட்டோரிக்கோ வம்சாவளி குடும்பம் ஒன்றைச் சேர்ந்த இவர், ஜனநாயகக் கட்சியின் முக்கிய வேட்பாளர் ஒருவரை மீறி, தனது கட்சியின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

தேர்வாவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்பு, அவர் மான்ஹாட்டன் நகரில் உள்ள ஓர் உணவு விடுதியில் பணியாற்றி வந்தார். அவர் வெளியிட்ட பிரசார காணொளி மிகவும் பிரபலமானது. அதில்,”என்னைப்போன்ற பெண்கள் இத்தகைய பதவிகளுக்கு போட்டியிடக் கூடாது எனும் எண்ணம் நிலவுகிறது,” என்று அவர் கூறியிருந்தார்.

37 வயதாகும் இவர், அமெரிக்க காங்கிரஸிற்கு தேர்வாக முதல் இரண்டு முஸ்லிம் வேட்பாளரில் ஒருவர். இவர் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர். மினசோட்டா மாகாணத்தில் இவர் வெற்றிபெற்றார்.

சோமாலியாவில் நடந்துவந்த உள்நாட்டுப்போரிலிருந்து தப்பித்து 1991 ஆம் ஆண்டு, அமெரிக்காவிற்கு வந்தார் இவர். தனது பதின்பருவத்தில் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முன்பு, நான்கு ஆண்டுகள் கென்யாவிலுள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்தார்.

வெற்றிக்குப்பிறகு பேசிய அவர், சோமாலியர்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு ஜனாதிபதி டிரம்ப் தடை விதித்துள்ள அதே நேரத்தில், மினசோட்டா மாகாண மக்கள், ஒரு சோமாலிய அகதியை தங்களின் பாராளுமன்றத்திற்கு தேர்வுசெய்து அனுப்பி, தங்களின் தெளிவாக செய்தியை பதிவு செய்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.

58 வயதாகும் டெப், ஜனநாயக கட்சியை சேர்ந்தவர். அமெரிக்காவில் முதன்முதலில் தேர்வான பூர்வக்குடி அமெரிக்க பெண்களில் இருவரில் இவரும் ஒருவர்.

லகூனா புவெப்லோ பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இவர், நியூ மெக்சிகோ பகுதியில் செனட்டராக வென்றுள்ளார்.

செனட் சபைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இன்னொரு பூரவக்குடி பெண்ணான 38 வயதாகும் சாரைஸ் டேவிட்ஸ் ஒரு தற்காப்புக்கலை வீராங்கனை ஆவார். கன்சாஸ் மாகாணத்தை பிரிநிதித்துவப்படுத்தும் முதல் ஒரு பாலுறவுக்காரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிரேக்கர்கள் பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத மோசமான அந்தரங்க ரகசியங்கள்!! (வீடியோ)
Next post மோசமான வாழ்க்கை முறையால் நோயால் பாதிக்கப்பட்டேன்! (சினிமா செய்தி)