கோர விபத்து 5 குழந்தைகள் உட்பட 7 பேர் தீயில் கருகி பலி!! (உலக செய்தி)
அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் லூசியானாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இருந்து ‘டிஸ்னி வேர்ல்டு’ பகுதிக்கு குழந்தைகளை ஒரு வேனில் சுற்றுலா அழைத்துச் சென்றனர்.
அந்த வேன் கென்ஸ் வில்லே என்ற இடத்தில் சென்றபோது அதிவேகமாக வந்த இரண்டு லொரிகள் பயங்கரமாக மோதிக் கொண்டன. மோதிய வேகத்தில் அவை குழந்தைகள் சென்ற வேனில் மோதின. இதனால் நொறுங்கிய வேன் ரோட்டில் கவிழ்ந்தது. அதன்மீது மேலும் 2 வாகனங்கள் மோதின. இதனால் வேன் தீப்பிடித்து எரிந்தது.
அதில் வேனில் இருந்த 5 குழந்தைகள் தீயில் கருகி பலியாகினர். அவர்கள் 9 முதல் 14 வயதினர் ஆவர். மேலும் 8 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். இதற்கிடையே வேன் மீது மோதிய லொரிகளின் ஓட்டுனர்கள் 2 பேரும் பலியாகினர்.