ஆன்லைன் மருந்து விற்பனைக்கு இடைக்கால தடை!! (மருத்துவம்)

Read Time:5 Minute, 5 Second

நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது நாட்டில் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை வீட்டு உபயோகப் பொருட்களைதான் ஆன்லைனில் பல நிறுவனங்கள் விற்பனை செய்து வந்தன. ஆனால், இப்போது சில தனியார் நிறுவனங்கள் மருந்து மாத்திரைகளையும் விற்பனை செய்யத் தொடங்கிவிட்டதால், ஆன்லைன் மருந்து விற்பனை தற்போது பிரபலமாகி வருகிறது.

‘இந்தியாவில் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. பல பதிவு செய்யப்படாத ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைனில் மருந்துகள் வாங்குவதும் விற்பனை செய்வதும் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவதாக இருக்கிறது.

எனவே, அங்கீகாரம் இல்லாமல் ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்வது தடுக்கப்பட வேண்டும். இந்த விற்பனை முறையினால் லட்சக்கணக்கான மருந்துக்கடை உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இணையதளம் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் இதுபோன்ற நிறுவனங்கள் எல்லாம் வெளிநாடுகளில் இருந்து செயல்பட்டு வருகிறது. எனவே, இந்த நிறுவனங்களை ஆன்லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்ய அனுமதிக்கக்கூடாது’ என்று தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளதுடன் மத்திய, மாநில சுகாதாரத் துறை செயலாளர்கள், மத்திய மருந்து தர கட்டுப்பாட்டாளர்கள், மாநில மருந்து தர கட்டுப்பாட்டாளர்கள் ஆகியோர் பதிலளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். உரிமம் இல்லாத நிறுவனங்களுக்கு மட்டுமே ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. உரிமம் பெற்ற நிறுவனங்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று விளக்கமும் அளித்துள்ளார்.

முதியோருக்கு இலவச தடுப்பூசி

இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் முதியோருக்கு நிமோனியா தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக சமூக
நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

சளி, தொடர் இருமல், காய்ச்சல், உடல்வலி, மூச்சுத்திணறல் இருந்தால் அது நிமோனியா நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். இருமல் அதிகரிக்கும்போது சிலருக்கு சளியில் ரத்தமும் கலந்திருக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களின் காது மற்றும் மூளையை பாதித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, 50 வயதைக் கடந்தவர்கள் இதற்கான தடுப்பூசியை ஆயுளுக்கு ஒருமுறை மட்டும் எடுத்துக்கொண்டால் போதும். ஒரு சிலருக்கு மட்டும் சில ஆண்டுகள் கழித்து தேவைப்பட்டால் இரண்டாவது முறை தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம். அரசு மானியம் பெறும் முதியோர் இல்லங்களில் தங்கி பயனடையும் முதியோரை நோய்த் தொற்றில் இருந்து பாதுகாக்க சுகாதாரத்துறையினர் மூலம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு நிமோனியா தடுப்பூசி அளிக்கப்படும்.

மூத்த குடிமக்கள் இது தொடர்பான உதவிக்கு 1253 மற்றும் 1800-180-1253 (சென்னை தவிர) ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறது தமிழக அரசின் அந்த செய்திக்குறிப்பு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபச்சார சுற்றுலா : கொடி கட்டிப் பறக்கும் முதல் 10 நாடுகள்!! (வீடியோ)
Next post தினமும் கோலம்போடுங்க! (மகளிர் பக்கம்)