மோடியிடம் இருந்து நாட்டை காப்பாற்றுமாறு பிரார்த்தனை!! (உலக செய்தி)

Read Time:1 Minute, 43 Second

டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான கெஜ்ரிவால் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. மொத்தம் 22 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மேற்கு வங்காளம் மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களுடன் டெல்லி பாராளுமன்ற வளாகத்துக்கு சென்ற மம்தா பானர்ஜி, அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வணங்கினார்.

அப்போது அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ’இன்றுடன் பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைகிறது. இன்றுதான் கடைசி நாள். எனவே, மத்திய ஆட்சியில் இருந்து பா.ஜ.க. மற்றும் மோடியை அகற்றி ,இந்த நாட்டை காப்பாற்றி, எல்லோரையும் பாதுகாக்குமாறு காந்தி சிலை முன்னர் பிரார்த்தித்தோம்’ என்று வேடிக்கையாக குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலேசியா பற்றிய பலரும் அறியாத 15 உண்மைகள்!! (வீடியோ)
Next post உண்மையான சொர்கம் I மாலத் தீவு !! (வீடியோ)