பண மோசடி வழக்கில் மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி யாமீன் அப்துல்லா கைது!!

Read Time:1 Minute, 22 Second

மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீன். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார்.

தேர்தலின்போது சட்ட விரோதமாக ரூ.10 கோடி பணம் பெற்றதாக இவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. அது தொடர்பான வழக்கு விசாரணை கிரிமினல் நீதிமன்றில் நடந்து வந்தது.

இந்த நிலையில் அப்துல்லா யாமீன் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் தலைநகர் மாலேவில் அருகே யுள்ள தூனிட்கோ தீவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் யாமீனுக்கு 15 வருட சிறை தண்டனையும், மோசடி செய்த பணத்தை விட 3 மடங்கு அபராத தொகையும் விதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மாலைத்தீவில் உள்ள யாமீனின் வங்கி கணக்குகளையும் ரூ.45 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் கோர்ட்டு முடக்கி வைத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தான் பற்றிய இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா? (வீடியோ)
Next post பிரசவத்தை எளிதாக்கும் பிஸியோதெரபி பயிற்சிகள்!! (மருத்துவம்)