சிறுநீரக கற்களை கரைப்பதற்கான மருத்துவம்!! (மருத்துவம்)

Read Time:5 Minute, 20 Second

எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், சமையலறையில் உள்ள உணவுப்பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்தி பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், சிறுநீரக கற்களை கரைப்பது குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். நெறிஞ்சில், வாழைதண்டு, முள்ளங்கி, வெட்டிவேர் போன்றவை சிறுநீரக கற்கள் பிரச்னைக்கு மருந்தாக அமைகிறது. சிறுநீரகத்தில், சிறுநீரக தாரையில், சிறுநீர் பையில் கற்கள் தோன்றுகிறது.

சிறிய கற்களாக இருந்தால் சிறுநீர்தாரையில் எளிதில் வெளியே வந்துவிட்டும். பெரிய கற்களாக இருந்தால் அது சிறுநீரக தாரையை அடைத்துக் கொண்டு வலியை உண்டாக்கும். அடிவயிறு, இடுப்பு வலி ஏற்படும். சிறுநீரோடு ரத்தம் கலந்து வெளியேறும். அதிக தண்ணீர் குடிக்காததால் கூட கற்கள் உருவாக காரணமாகிறது. மக்காசோளத்தை பயன்படுத்தி நிறுநீரக கற்களை போக்கும் தேனீர் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: மக்காசோள இலைகள், பனங்கற்கண்டு. மக்காசோளத்தில் முடிபோன்று இருக்கும் இலைகளை எடுத்துகொள்ளவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி தினமும் இருவேளை 100 மில்லி அளவுக்கு குடித்துவர சிறுநீரக கற்கள் வெளியேறும். சிறுநெறிஞ்சில், வெட்டிவேரை பயன்படுத்தி சிறுநீரக கற்களுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சிறுநெறிஞ்சில், வெட்டிவேர், பனங்கற்கண்டு.

சிறு நெறிஞ்சிலின் இலை, வேர், பூ என அனைத்து பாகங்களும் சேர்த்து ஒருபிடி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சம அளவு வெட்டிவேர் சேர்க்கவும். சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல் தணியும். புண்களை ஆற்றும். சிறுநீரக கற்களை வெளியேற்றும். பல்வேறு நன்மைகளை கொண்ட நெறிஞ்சில் தரையோடு தரையாக படர்ந்து காணப்படும்.

காண்பதற்கு அழகாக இருக்கும். சிறுநெறிஞ்சில் கூரிய முட்களையும், மஞ்சள் நிற பூக்களையும் உடையது. கீழாநெல்லியை போன்ற இலைகளை கொண்டது. ஈரலை பாதுகாக்க கூடியது. சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மை உடையது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வெட்டிவேர் சிறுநீரக கற்களுக்கு மருந்தாகிறது. முள்ளங்கி, வாழை தண்டு ஆகியவற்றை பயன்படுத்தி சிறுநீரக கற்களை கரைக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: முள்ளங்கி, வாழைத்தண்டு, மோர்.

அரை டம்ளர் மோர் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் கால் டம்ளர் வாழைத்தண்டு சாறு, கால் டம்ளர் முள்ளங்கி சாறு ஆகியவற்றை சேர்த்து கலந்து தினமும் காலை வேளையில் குடித்துவர சிறுநீரக கற்கள் கரையும். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட வாழைத்தண்டு சிறுநீரக கற்களை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பல நோய்களை போக்கும் தன்மை முள்ளங்கிக்கு உண்டு. இது சிறுநீரக கற்களை கரைக்கும். எரிச்சலை போக்கும்.

சிறுநீரக கற்கள் பிரச்னைக்கு வாழைத்தண்டு, முள்ளங்கி போன்றவற்றை பயன்படுத்தி பாதுகாப்பான மருத்துவத்தை வீட்டில் இருந்தபடியே செய்து பயன்பெறலாம். சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது குறித்த மருத்துவத்தை பார்க்கலாம். சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் வெங்காயம் அற்புதமான மருந்தாக விளங்குகிறது. வெங்காயத்தில் இன்சுலினுக்கு இணையான சத்துக்கள் உள்ளன. மதிய உணவோடு சுமார் 50 கிராம் பச்சை வெங்காயத்தை மோரிலோ, பச்சடியாகவோ சேர்த்து கொண்டால் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனா நம்மிடம் வாலாட்டுவது ஏன்? அதிர்ச்சிகரமான தகவல்கள்!! (வீடியோ)
Next post இந்த வார்த்தையை சொன்னால் சிக்கன் லெக் பீசில் 10 ரூபாய் தள்ளுபடி! (உலக செய்தி)