By 29 March 2019 0 Comments

ஆப் டவுன்லோட் செய்யுங்க… மருந்து வாங்குங்க..!! (மகளிர் பக்கம்)

ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு பிரச்னை இல்லாதவர்கள் இல்லை. வீட்டில் இருக்கும் வயதானவர்களுக்கு அதில் ஏதும் ஒரு பிரச்னை இருப்பது இயல்பு. மாதம் தோறும் அதற்கான மருந்துகளை தவறாமல் சாப்பிடவேண்டும். கணவன்- மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் கட்டாயத்தில் இருப்பதால், இவர்கள் தானாகவே சென்று மருந்துகளை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அல்லது மகனையோ, மருமகளையோ, மகளையோ அவர்கள் சார்ந்து இருக்க வேண்டும்.

மருந்துகளை மருந்துக்கடைக்கு சென்று தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் இனி இல்லை. வீட்டில் இருந்தபடியே தேவையான மருந்துகளை ஆன் லைனில் பதிவு செய்தால் போதும், அவை நம் வீட்டுக்கே டெலிவரியாகிவிடும். அது மட்டும் இல்லை லேப்பில் செய்ய வேண்டிய அனைத்து பரிசோதனைகளையும் வீட்டில் நம் வசதிக்கு ஏற்ப செய்து கொள்ளலாம். இதற்கு சிறப்பு app(ஆப்)கள் உள்ளன. கைபேசியில் டவுன்லோட் செய்யுங்க… மருந்து உங்க வீடு தேடி வரும்.

Klinikals

வா டிக்கையாளர்களின் மருத்துவ தேவைகளை நிவர்த்தி செய்ய அறிமுகம் செய்யப்பட்டது தான் Klinikals ஆப். டாக்டரின் அப்பாய்ன்ட்மென்ட், மருந்துகள் வாங்க, ஆய்வக சோதனை செய்ய…. அனைத்தும் ஆப்பில் உள்ளது. டாக்டர்களுடன் நேரடியாக தொலைபேசியிலோ அல்லது வீடியோ மூலம் சிகிச்சை பெறலாம். மருந்துகள் வாங்க வேண்டும் என்றால்… டாக்டரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை இதில் முதலில் பதிவு செய்ய வேண்டும். அவ்வளவு தான். நான்கு மணி நேரத்திற்குள் நீங்க ஆர்டர் செய்து மருந்துகள் உங்களை நாடி வந்துவிடும்.

வீட்டில் உள்ள வயதானவர்களுக்கு மாதம் தவறாமல் நீரிழிவு, ரத்த அழுத்தம் மட்டும் இல்லாமல் பொது உடல் பரிசோதனை செய்வது அவசியம். இதற்காக மருத்துவமனை போகாமல் ஆப் மூலம் வீட்டிேலயே பரிசோதனை செய்யலாம். பரிசோதனை அறிக்கைகளும் வீட்டிலேயே கொண்டு வந்து தரப்படும். அல்லது மின்னஞ்சல் வசதியும் உள்ளது. டாக்டரை நேரடியாகத்தான் பார்க்க வேண்டும் என்றில்லை. அவரிடம் இந்த ஆப் மூலம் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். பிரச்னைக்கு ஏற்ற நிபுணரை தேர்வு செய்து, பிரச்னைக்கான தீர்வு காணலாம்.

அவரிடம் பரிசோதனை அறிக்கைகளை மற்றும் உங்களை பற்றிய முழு விவரங்களையும் தெரிவிக்கலாம். உங்களின் அறிக்கைகளை ஆய்வு செய்து மருந்துகளை பரிந்துரைப்பார். என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்து இருந்தாலும், டாக்டரை நேரடியாக பார்த்தால் தான் திருப்தி. அந்த சமயத்தில் அவரை வீடியோ மூலம் அணுகலாம். உங்களின் மருத்துவ அறிக்கைகள் சேமிக்கப்படுவதால், எப்போது வேண்டும் என்றாலும் உங்களின் மருத்துவ வரலாற்றினை டாக்டர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். எல்லாவற்றையும் விட இந்த ஆப்பின் முக்கிய அம்சம் தள்ளுபடி. முதன் முதலில் பயன்படுத்துபவர்களுக்கு 25% தள்ளுபடி. தொடர்ந்து வாங்கினால் 20%. இதனுடன் கேஷ்பேக் ஆபர்களும் உள்ளது.

Drugs.com

மருத்துவம் சார்ந்த எளிய கைட் Drugs.com. மாத்திரைகளை அடையாளம் காண்பது முதல், அது குறித்த விவரங்கள் மற்றும் மருத்துவ ஆய்வறிக்கைகள் அனைத்தையும் இதில் பதிவு செய்யலாம். வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு தேவையான மருந்தினை ஒரு பட்டியலிட்டு பெறலாம். FDA குறித்த அறிவிப்புகள், உணவு ஒவ்வாமை மற்றும் மருத்துவ நிலை குறித்த பரஸ்பர கலந்துரையாடல்கள் அனைத்தும் ஆன்லைனில் செய்யமுடியும். மருத்துவ துறை பெரிய கடல். இதில் ஒவ்வொரு பிரச்னைக்கும் தனிப்பட்ட தீர்வுண்டு. கேள்வி-பதிலாக இதில் அவ்வப்போது அப்டேட் செய்யப்படுவதால். வாடிக்கையாளர்கள் நோய் குறித்த செய்திகளை தெரிந்து கொள்வது மட்டும் இல்லாமல் அதற்கான தீர்வினையும் பெறலாம். நிபுணர்களின் ஆலோசனையும் நேரடியாக பெறும் வசதியும் உள்ளது.

1mg

1mg வாடிக்கையாளர்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் நேர்த்தியான ஆப். மருந்து குறித்த விவரங்கள், மருந்துகள் வாங்க, பரிசோதனைகள், ஆன்லைனில் டாக்டர்களின் ஆலோசனை மற்றும் ஆரோக்கிய குறிப்புகளும் இந்த ஆப்பில் உள்ளன. ஒரு மாத்திரையை பல மருத்துவ நிறுவனங்கள் தயாரித்தாலும், அதன் கலவை எல்லாம் ஒன்று தான். மருந்துகள் பற்றி விவரங்கள் அதன் கலவை மற்றும் பயன்பாடு, தயாரிக்கும் நிறுவனங்கள் குறித்த விவரங்களும் இதில் உள்ளது. டாக்டரின் ஆலோசனைபடி அந்த மருந்துகளை பரிந்துரைக்கலாம்.

ஒரு மருந்து சாப்பிடுவதால் சில பிரச்னைகள் குணமாகும். அதே சமயம் பின்விளைவுகளும் ஏற்படும். அது என்ன என்பதையும் இந்த ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம். மருந்துகள் குறித்து கேள்விகள் சந்தேகங்களுக்கான விடைகள் பெறலாம். 1mg உங்க பாக்கெட்டில் இருக்கும் மருந்துக்கடை. அலோபதி மருந்துகள் மட்டும் இல்லை. ஹோமியோபதி, ஆயுர்வேத மூலிகை வேர்கள் அனைத்தும் 1mg வழங்குகிறது. இந்தியா முழுதும் 1200 நகரங்களில் 1mg செயல்பட்டு வருகிறது. ஆர்டர் செய்யப்படும் மருந்துகளுக்கு 20% தள்ளுபடி கிடைக்கும்.

வாடிக்கையாளர்களின் பாதுகாப்புதான் இவர்களின் தாரக மந்திரம் என்பதால், ஆர்டர் செய்யப்படும் மருந்துகள் அனைத்தும் தரமானதாக அளிக்கிறார்கள். ஆன்லைன் மூலம் பரிசோதனைக்கும் நேரம் நியமிக்கலாம். ரத்தப் பரிசோதனை, நீரிழிவு பரிசோதனை, விட்டமின் டி, சிறுநீர் மற்றும் முழு உடல் பரிசோதனையை வீட்டிலேயே செய்யலாம். பொது மருத்துவர்கள் முதல் மகப்பேறு மருத்துவர்கள், சரும நிபுணர்கள், பல் மருத்துவர்கள், குழந்தை நிபுணர்கள், நரம்பியல் நிபுணர்கள்… என அனைத்து துறை சார்ந்த மருத்துவர்கள் இதில் பதிவு செய்துள்ளனர். உங்களின் பிரச்னைக்கு ஏற்ப டாக்டரிடம் ஆலோசனை பெறலாம். ஆரோக்கியம் மற்றும் தனிப்பட்ட பிரச்னை சார்ந்த குறிப்புகளும் 1mgயில் உள்ளது.

SastaSundar

மருத்துவர்களை இணைக்கவும் மற்றும் சுகாதார தகவல் மற்றும் நோயாளிகளுக்கு தேவையான சேவைகளை வழங்கும் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் பயன்பாடு தான் SastaSundar ஆப். வாடிக்கையாளர்களுக்கு தேவையான மருந்துகளை அவர்களின் வசதிக்கு ஏற்ப குறைந்த விலையில் இதில் பெற்றுக் கொள்ளலாம். மருந்துகளை அதன் பெயர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் கொண்டு தேர்வு செய்யலாம். ஒவ்வொரு மருந்து குறித்தும் விளக்கம் இருப்பதால், அந்த மருந்தினை பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளை ஆப்பில் அப்லோட் செய்து பெறலாம். நம் குடும்பத்தில் உள்ள அனைவரின் மருத்துவ அறிக்கைகளை இதில் பதிவு செய்யலாம். நர்சிங் உதவி, வயதானவர்களுக்கான பராமரிப்பு சேவைகளும் உள்ளது. மற்ற ஆப்களில் இருப்பது போல் டாக்டரின் அப்பாயின்ட்மென்ட் மற்றும் வீட்டில் வந்து ஆய்வுகளை செய்யும் வசதியும் உண்டு. பொது மருத்துவ நிபுணர், தோல் மருத்துவர் (தோல் நிபுணர்), இரைப்பை நோய்தொழிலாளர், நரம்பியல் நிபுணர், சிறுநீரக மருத்துவர், பல் மருத்துவர், கார்டியலாஜிஸ்ட்,

கண் நிபுணர், பொது மருத்துவர், தைராய்டு நிபுணர், எலும்பியல் மருத்துவர், சிறுநீரக மருத்துவர் (குழந்தை நிபுணர்), பிசியோதெரபிஸ்ட் போன்ற நிபுணர்களின் ஆலோசனையை பெறலாம். துல்லியமான மருத்துவ சோதனை, ரத்தப் பரிசோதனை, ரத்தக் குழாய் சோதனை, TSH, LFT, லிபிட் புரோபைல், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு முதலியவற்றை கவர்ச்சிகரமான தள்ளுபடிகளில் வீட்டிற்கே வந்து சோதனை செய்யும் வசதியுள்ளது. பிசியோதெரபி, நர்சிங், வயதானவர்களை பராமரிக்க பயிற்சி பெற்ற உதவியாளர்கள், தாய் மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகளும் பெறலாம்.

Pharm Easy

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் மருந்து விற்பனை மையம். தமிழ்நாடு, மும்பை, குர்கான், தில்லி, நொய்டா, ஆந்திரா, மேற்குவங்காளம், குஜராத், கொல்கத்தா, பெங்களூரூ, ஐதராபாத், சென்னை, ராஜஸ்தான்… போன்ற இடங்களில் இதன் சேவை பரந்து விரிந்துள்ளது. PharmEasy ஆப்பினை உங்க கைபேசியில் டவுன்லோட் செய்து மருந்துகளை 24-48 மணி நேரத்தில் பெறலாம். ஒவ்வொரு முறை ஆர்டர் செய்யப்படும் மருந்துகளுக்கு 20% தள்ளுபடி.

மருந்துகள் தவிர மற்ற ஆயுர்வேத பொருள்களும் ஆர்டர் செய்யும் வசதியுண்டு. மருத்துவ பரிசோதனையை வீட்டிலேயே பெறலாம். பரிசோதனைக்கு ஏற்ப தள்ளுபடி உண்டு. ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதிகளில் மருந்துகளை டெலிவரி செய்வதற்கு ஏற்ப அந்த தேதி மற்றும் மருந்துகள் பற்றிய விவரங்களை பதிவு செய்யலாம். இதன் மூலம் மருந்து தீரும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. முன்பே பதிவு செய்து இருப்பதால், PharmEasy நமக்கு நினைவூட்டும்.



Post a Comment

Protected by WP Anti Spam