சென்னை மெட்ரோ சேவையில் எந்த பாதிப்பும் இல்லை!! (உலக செய்தி)
மெட்ரோ சேவையில் எந்த பாதிப்பும் இல்லை என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. ரயில்கள் வழக்கம் போல் இயங்குகிறது என்றும் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஒப்பந்த பணியாளர்களை கொண்டு மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருவதாக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. பணி முடிந்து சென்ற ஊழியர்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிற்சங்கம் அமைத்ததற்காக சென்னை மெட்ரோ ஊழியர்கள் 8 பேரை பணி நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 8 மெட்ரோ ரயில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து மெட்ரோ ரயில் ஓட்டுநர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மெட்ரோ ரயில் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
Average Rating