ஜெயம் ரவிக்கு 9 வேடங்கள் !! (சினிமா செய்தி)
அடங்கமறு படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ‘கோமாளி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது.
இந்த படத்தில் ஜெயம் ரவி 9 வேடங்களில் நடித்து வருகிறார். இதில், ஜெயம் ரவியுடன் முதல் முறையாக காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்திருக்கிறார்.
படத்தை இயக்கி வரும் பிரதீப் ரங்கநாதன் படத்தை பற்றி கூறியதாவது:-
‘‘இது, ஜெயம் ரவி நடிக்கும் 24-வது படம். இதில் ராஜா, ஆதிவாசி, பிரிட்டீஷ் காலத்து அடிமை, 1990-களில் வாழ்ந்த இளைஞர் உள்பட 9 வேடங்களில் அவர் நடிக்கிறார். இந்த 4 வேடங்கள் தவிர மற்ற வேடங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
படத்தின் இன்னொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடிக்கிறார். கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
தொழில்நுட்ப துறையில் வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய உலகையும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் சித்தரிக்கும் படம், இது. இதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறோம். பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்தது.’’ என்றார்.