கம்போடியாவின் பொருளாதாரக் கொள்கை !! (கட்டுரை)

Read Time:8 Minute, 17 Second

தாய்லாந்துக்கும், வியட்நாமுக்கும் இடையில் அமைந்துள்ள கம்போடியா, 440 கிலோ மீற்றர் கடலோர வலயத்தைக் கொண்டுள்ளதுடன், பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மேம்படுவதற்கு அது இக்காலகட்டத்தில், ஒரு “மூன்றாவது நட்பு நாடு” ஒன்றை நாடவேண்டிய தேவையில் உள்ளது.

கம்போடியாவின் ஐக்கிய அமெரிக்க உறவு, கம்போடியாவுக்கு எதிராக கம்போடியா ஜனநாயகக் சட்டத்தை 2018இல் ஐக்கிய அமெரிக்கா நிறைவேற்றிய பின்னர் மிகவும் உடைந்துபோயுள்ளதுடன், தற்பொழுது, கம்போடியாவின் “மூன்றாவது நட்பு நாடு” சீனாவாகும். அதன் அடிப்படையிலேயே கம்போடியா சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தில் பங்குபெற முடிவெடுத்ததுடன், இல்லையெனில் கம்போடியாவால் தென்கிழக்கு ஆசியா சந்தைகளுக்கு அணுக முடியாது என்பதே அதன் அர்த்தமாகும்.

மேலும், இவ்வாண்டு ஜனவரி மாதம் கம்போடியாவின் பிரதமர் ஹன் சென்வின் சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு செல்லும்போது, ​​சீனா 2021ஆம் ஆண்டில் கம்போடியாவுக்கு 588 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை உதவித்தொகையாக ஒதுக்கீடு செய்திருந்ததுடன், 400,000 டன் அரிசி இறக்குமதிகளை அதிகரிக்கவும், இருதரப்பு வர்த்தகம் 2023இல் 10 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு விருத்தி செய்யவும் கையொப்பமிட்டமை, கம்போடியாவின் பொருளாதார உயிர்வாழ்வை உறுதிப்படுத்த உதவியிருந்தது.

கம்போடியாவின் பொருளாதாரம் சந்தை மாற்றங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்கு தொடர்ச்சியாக இருந்து வருகின்றது. இதன் அடிப்படையிலேயே இத்தாலி கம்போடிய அரிசி இறக்குமதி செய்கின்றது. கம்போடிய உணவுப் பொருட்களின் முக்கிய பொருட்களான அரிசியை இத்தாலி இறக்குமதி செய்வது கம்போடியாவுக்கு பொருளாதார நன்மை என்பதையும் தாண்டி. இத்தாலி மூலம் கம்போடியா, கம்போடிய-ஐரோப்பிய ஒன்றியம் இணைந்த “ஆயுதங்கள் தவிர்ந்த ஏனையவை” உள்ளடங்கலான பாரிய ஒப்பந்தத்தை அண்மையில் கையளித்திட்டமை கம்போடியாவின் பொருளாதாரத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

அரசியல் ரீதியாக, நீண்ட கால சமாதானத்தையும் கடுமையான நடுநிலைப்பாட்டையும் பராமரிக்கும் போதே, கம்போடியா அதன் பொருளாதார செயல்திறனை மேம்படுத்த முடியும் என்று பெனோம் பென் நன்கு அறிந்துள்ளது. கம்போடியா உலகின் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக (2018இல் 7.5%) உள்ளது. நாட்டின் தற்போதைய வளர்ச்சி வேகத்தை நிர்ணயிப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் கம்போடியா அதன் உற்பத்திக்கான பொருட்களின் ஏற்றுமதிகள் (80 சதவிகிதம் ஏற்றுமதியின் கட்டமைப்பில்) மற்றும் அரிசி ஏற்றுமதி என்பவற்றை அதிகரிக்க வேண்டும். மேலும் கம்போடியா சுற்றுலா மற்றும் ஊக்குவிப்பு மற்றும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க வேண்டும் என்பதும் அவசியமானது. ஆயினும், வட கொரிய பிரச்சினை தனது பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதிக்கும் என கம்போடியா நினைக்கிறது.

கம்போடியா பாரம்பரியமாக கொரிய நாடுகளுடன் நெருக்கமான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை பராமரிக்கையில், வடகொரிய பிரச்சினை கம்போடியாவின் நீண்ட கால நடுநிலைத்தன்மையை கேள்விக்குட்படுத்தும் என்றே கம்போடியா உணர்கின்றது. கம்போடியா மற்றும் வட கொரியா மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச மன்றங்களில் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கியிருந்ததுடன், வட கொரிய இராணுவ வல்லுநர்கள் கம்போடியாவில் நிலக் கண்ணிவெடி அகழ்வு சேவைக்கு உதவியிருந்தனர். இன்னும், வட கொரியா கம்போடிய நாட்டின் சுற்றுலாத் துறையில் 24 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறத்தில் தென் கொரியா சீனாவுக்கு அடுத்தபடியாக கம்போடியாவிற்கு இரண்டாவது பெரிய முதலீட்டாளர் ஆகும். கம்போடியாவில் மொத்தம் தென் கொரிய முதலீடுகள் 4.8 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை அடைந்துள்ளன. கம்போடியாவில், தென்கொரியா ஒரு செல்வாக்கு வாய்ந்த பொருளாதார வீரர் என்பதுடன், தென்கொரியா தொடர்ச்சியாக கம்போடிய பொருளாதாரத்தின் பரவலுக்கு பங்களிப்பு செய்கிறது.

இந்நிலையிலேயே, கம்போடியாவுக்கு தெற்காசியாவை தாண்டி பரவலான மேற்கத்தேய பொருளாதாரத்துடன் தொடர்பு கொள்ளுதல் அவசியமானதாகின்றது. இதன் அடிப்படையில், கம்போடியாவின் பொருளாதார கொள்கை வெகுவிரைவில் பாரிய மாற்றமடையும் என்பதுடன், அதன் தொடக்கமே, ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தம் என்பதை நன்கு அறிதல் அவசியமானது. அதன் படி, அடுத்த சில ஆண்டுகளில் கம்போடியாவின் பொருளாதார கொள்கை அகலப்படுத்தப்படும் என்பதை ஊகித்தால், அதிகமான வெளிநாட்டு பொருளாதார பங்காளர்களை (ஜப்பான்,அவுஸ்திரேலியா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம்) கம்போடியா ஈர்த்து கொள்ளும் என்பதை எதிர்பார்க்கலாம்.

மேலும், அதன் பிரகாரம், கம்போடியா தெற்கு பொருளாதாரப் பரப்பிற்குள் பிராந்திய ஒருங்கிணைப்புகளை வலுப்படுத்தவே முயலும். இது சீனாவுடன் எவ்வளவு தூரம் அதன் பொருளாதார கொள்கைகளுக்கு இயைவாக அமையும் என்பது ஒரு புறம் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். மறுபுறம், கம்போடியா தொடர்ச்சியாகவே ஆசியக் கட்டமைப்பில் கவனம் செலுத்துவது, மற்றும் அமெரிக்க-வட கொரிய, சீன-அமெரிக்க, மற்றும் சீன-வியட்நாமிய வேறுபாடுகளை குறைத்தலில் முனைப்பை காட்டுவதும், கம்போடியா அதன் பொருளாதார நன்மை மற்றும் அதன் வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயல்படுவதையே காட்டுவதாய் அமையும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஜய் மனைவி, அஜித் மனைவி பற்றி சில விஷயங்கள்!! (வீடியோ)
Next post ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள் தெரியுமா? (அவ்வப்போது கிளாமர்)